

தமிழ் சினிமாவில் தரமான படங்களை படைப்பதில் வல்லவர்கள் என்றால் ப்ரோடன்சியல் சினிமா தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்,ஆர் பிரகாஷ் பாபு இந்த கூட்டணி படங்கள் எல்லாமே தரமான படங்களை மற்றும் தான் தயாரிப்பார்கள் என்பது நாம் அறிந்த விஷயம் அந்த விதத்தில் இவர்களின் இன்றைய படைப்பு இருகப்பற்று. ஒரு அற்புதமானா இன்றைய காலத்து மூன்று தம்பதிகளுக்குள் நடக்கும் ஒரு போராட்த்தை மிக எதார்த்தமாக கொடுத்து இருக்கும் படம்
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷரத்த ஸ்ரீநாத், அபர்நிதி,சானியா மற்றும் பலர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் இருகப்பற்று
விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். கணவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடையும் அபர்ணதி, மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார். அவர் வழங்கிய ஆலோசனைக்குப் பிறகும் விதார்த் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறார். மறுபக்கம், காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ, தனது மனைவி சானியா தன்னைவிட்டு விலகியே இருப்பதாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஆலோசனை பெறுகிறார்.
இரண்டு தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு உண்மையான பின்னணி என்னவென்று கண்டறிந்து அதை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தான் சந்திக்கும் தம்பதிகளிடம் எழும் பிரச்சனைகள் போல், தனக்கும், தனது கணவருக்கும் இடையே ஏற்படக்கூடாது என்பதில் கவணமாக இருப்பதோடு, மற்றவர்களுக்கு அவர் சொல்லும் ஆலோசனைகளை தனது குடும்ப வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறார். ஆனால், தனது மனைவி தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது கணவர் விக்ரம் பிரபு மனைவி மீது கோபமடைவதோடு அவரை விலகி செல்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனைகள் தீர்ந்ததா?, இல்லையா? என்பதை பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருப்பதே ‘இறுகப்பற்று’.
படத்தில் நடித்த அனைவரும் நீ நான் என்று போட்டி போட்டு நடித்துள்ளனர். யாருக்கும் யார் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளனர்.
ஷ்ரத்த ஸ்ரீநாத் மனோதத்துவ நிபுணராகவும்,நல்ல மனைவியாகவும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் . எப்படிப்பட்ட பிரச்சனைகளோடு வந்தாலும் தனது ஆலோசனை மூலம் அவர்களை சரிபடுத்தி விடும் திறன் கொண்டவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன் வாழ்க்கையில் பிரச்சனை வந்ததும் தடுமாறும் இடங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். தன்னிடம் சண்டையே போடாத மனைவி பற்றி பெருமையாக நினைப்பவர், அவர் தொழிலை வாழ்க்கையோடு சேர்த்து பார்க்கும் போது பதறும் காட்சிகளில் சராசரி மனிதனின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து முடிவுக்கு வரும் விதார்த், அதற்கான நிஜ காரணத்தை சொல்லி தன் உள்ளத்தில் இருக்கும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தும் காட்சியில் அசுரத்தனமான நடிப்பு மூலம் அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி விடுகிறார்.
விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதி சராசரி மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பும், கணவனுக்கான தவிப்பும் கைதட்டல் பெறுகிறது.
இளம் தம்பதிகளான ஸ்ரீ – சானியா ஜோடியின் நடிப்பும் மற்ற ஜோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், மனைவியை மட்டம் தட்டும் ஸ்ரீயின் குணமும், அதனால் பாதிக்கப்படும் சானியாவின் குமுறலும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
மூன்று தம்பதிகளை சுற்றி கதை நகர்ந்தாலும், இவர்களை தாண்டியும் சில கதாபாத்திரங்கள் தலை காட்டுகிறார்கள். ஆனால், அதில் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவது மனோ பாலா தான். மனைவியை நினைத்து கண்கலங்கும் ஸ்ரீக்கு அறிவுரை சொல்லிவிட்டு, தனது மனைவிக்கு போன் செய்து மன்னிப்பு கேட்கும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்து போகிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அதே போல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசை இயக்குனருக்கு பலம் என்று தான் சொல்லணும் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும்.
கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதற்கு காரணம் தேவையில்லை இருவருக்கும் பொருத்தம் இல்லை என்ற என்ன ஓட்டம் தான் காரணம் என்ற எதார்த்த பின்னணியில் இந்த படத்தின் கதை திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு னிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் வாழ்வியலாக இருந்தாலும், அதை பாடம் எடுப்பது போல் அல்லாமல் சிரித்து, ரசித்து பார்க்க கூடிய சுவாரஸ்யமான படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
விவாகரத்துக்காக வரும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த படத்தை பார்த்தால் அதுபோன்ற மனநிலையில் உள்ளவர்கள் நிச்சயம் தங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. அதிலும், நீதிமன்றங்களில் விவாகரத்து கோரும் தம்பதிக்கு ஆலோசனை வழங்குவதோடு, இந்த படத்தை போட்டுக் காட்டினால் நிச்சயம் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுவது உறுதி.
கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அதை மறந்து ஒருவருக்குள் ஒருவர் புரிந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை இறுகப்பற்றி கொள்ளும் என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தை அனைவரும் குறிப்பாக இன்றைய இளைய தம்பதியினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
