Monday, May 20
Shadow

இறுதிப்பக்கம் – திரை (Rank 3.5/5)


இறுதிபக்கம் புதியவர்களின் புதிய முயற்சி சின்ன பட்ஜெட் வந்துள்ள ஒரு நல்லபடம் என்று சொன்னால் மிகையாகது

இறுதி பக்கம்(Last page)

தயாரிப்பு – ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில்
சிலம்பரசன் கிருபாகரகரன் செல்வி வெங்கடாசலம்… தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
ராஜேஷ் பாலச்சந்திரன் as குமார் – அம்ருதா ஸ்ரீநிவாசன் as இயல்
விக்னேஷ் சண்முகம் as பிரசாந்த் – கிரிஜா ஹரி as ஜெனிபர் ஸ்ரீ ராஜ் as மிதுன் – சுபதி ராஜ் as ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் பிரவின் பாலு ஒளிப்பதிவில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் இந்த படம் ஊருவகியுள்ளது.

இளைஞர்களின் கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ளது இறுதிப்பக்கம். சிறு முதலீட்டு படங்கள் எல்லாமே மோசமான படங்கள் கிடையாது. அதிலும் நல்ல முத்துக்கள் கிடைக்கும் என இப்படம் நிரூபித்துள்ளது.

மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா, விக்னேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அம்ருதா ஒரு எழுத்தாளர். சிறுவயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்தவர். இந்நிலையில் இவர் திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை பிடித்து விசாரிக்கும் காவல்துறையினருக்கு அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளி யார் கொலைக்கான காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ளனார் இயக்குனர். சில கதாபாத்திரங்களே இருந்தாலும் திரைக்கதையில் மாயம் செய்துள்ளார் இயக்குனர் மனோ வெ கண்ணதாசன். நல்ல கதை, திரைக்கதை இருந்தால் பார்வையாளர்களை வசியப்படுத்தி விடலாம் என்ற வித்தை தெரிந்தவராக இருக்கிறார் இயக்குனர். எழுத்தாளர் இயலாக நடித்துள்ள அம்ருதா ஶ்ரீனிவாசன், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ராஜேஷ் பாலச்சந்திரன், பிரசாந்த் ஆக நடித்துள்ள விக்னேஷ் சண்முகம், ஜெனிபராக நடித்துள்ள கிரிஜா மிதுனாக நடித்துள்ள ஶ்ரீராஜ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. வசனங்கள் நன்றாக உள்ளது. ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை ஓகே. ராம் பாண்டியனின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான பணியை செய்துள்ளது. மிகக்குறைந்த பொருட்செலவில் இவ்வளவு சிறப்பான த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.