
நடிகர் கதிர், பரியேறும் பெருமாள், பிகில் படங்களை தொடர்ந்து நடித்திருக்கும் படம் ஜடா. இந்தப்படமும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

அறிமுகம் இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கால்பந்தை மையமாக கொண்ட இந்த் படத்தில் ஹீரோ ஜடா (கதிர்) வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடித்துள்ளார். சந்தோஷ் கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடினால் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைக்கும் என்றும் அதனால் சிறப்பாக விளையாட வேண்டும் என்று இவரது பயிற்சியாளர் ஜடாவிடம் தெரிவிக்கிறார். இந்நிலையில் கதிர், கொலை செய்யப்பட்ட தனது குழந்தை பருவ கால்பந்து வீரர் சேது (கிஷோர்) இறப்புக்கு பழி வாங்கும் முடிவில் இருக்கிறார். சேது 7எஸ் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்டவர். இதனால், அரசு, உள்ளுரில் 7எஸ் கால்பந்துக்கு பத்து ஆண்டு தடை விதித்தது. தற்போது கதிர் மற்றும் அவரது அணியினர் 7 எஸ் போட்டியில் பங்கேற்க தங்கள் பெயர்களை பதிவு செய்கிறார்கள். இதில் அவர் வெற்றி பெற்றார்களா என்பதே படத்தின் மீதி கதை.

நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கதிர். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய தவறியுள்ளார். யோகி பாபுவின் காமடி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகைய்லேயே அமைந்துள்ளது. மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்ய தவறியுள்ளனர் என்பதே உண்மை.
தொழில்நுட்பரீதியாக பார்க்கும் சாம் சிஎஸ் இசை திரைகதைக்கு பலம் படத்துக்கு மேலும் ஒளிப்பதிபாளர் மெருகுயேற்றியுள்ளர்.
படத்தின் பிளஸ்: கதிர் நடிப்பு மற்றும் யோகிபாபு நகைச்சுவை மற்றும் அவரின் கால்பந்து விளையாட்டும்
மொத்தத்தில், ஜடா அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படமாகவே உள்ளது.
