
எப்படி இருக்கிறது ஜெயிலர் – திரை விமர்சனம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஜெயிலர் திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். இவரது மகன் வசந்த் ரவி உதவி ஆணையராக இருக்கிறார். இவரை தன்னைப் போலவே நேர்மையாக வளர்த்துள்ளார் ரஜினி. மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் ரித்விக் உடன் வாழ்ந்து வருகிறார் ரஜினி. சிலை கடத்தல் செய்யும் விநாயகனின் லாரியை வசந்த் ரவி பிடித்து விடுகிறார். இதனால் அவரை கடத்தி விடுகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டார் என ரஜினியிடம் போலீஸ் தெரிவிக்கிறது. தனது நேர்மையால்தான் மகன் கொல்லப்பட்டான் என வருந்தும் ரஜினி எடுக்கும் முடிவு தான் படம்.
முதல் பாதியில் அமைதியான ஓய்வுபெற்ற ஜெயிலராக ரசிக்க வைக்கிறார் ரஜினிகாந்த். அவ்வப்போது யோகி பாபுவுடன் செய்யும் காமெடி சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. முதல் பாதி மெதுவாக தொடங்கி அப்படியே பரபரவென பயணிக்கிறது. ரஜினி இந்த வயதிலும் மனிதர் நெருப்பாக இருக்கிறார். இவரது ஸ்டைல், நடை எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து. இடைவேளை காட்சி கத்தி படத்தில் வருவது போல இருந்தாலும் சூப்பர். இரண்டாம் பாதியில் கதை எங்கெங்கோ சென்று தொங்கி நிற்கிறது. சிவராஜ் குமார் தமிழ் சினிமாவில் இவரை மிகவும் ரசிக்க வைக்கிறது. மோகன் லால் சிறப்பு தோற்றம் குறிப்பாக மோகன் லால் வரும் காட்சிகள் தெறி வெறித்தனம். தமன்னா சில காட்சிகள் வந்தாலும் நம்மை கவருகிரார்.
சுனில் , தமன்னா காட்சிகள் இரண்டாம் பாதியில் கலகலப்பான நகைச்சுவையை கொடுக்கிறது.
கிளைமாக்ஸ் அட்டகாசம். கிளைமாக்ஸ் காட்சி நம்மை நெகிழ அதோடு பிரமிக்க வைக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம். வில்லன் விநாயகன் மலையாளம் கலந்து அவர் பேசும் வசனங்கள் நடிப்பு அருமை. ரஜினியின் ஃபிளாஷ்பேக் நம்மை வாவ் என்று நம்மை மிரட்டுகிறார் சூப்பர் ஸ்டார் குறிப்பாக ஜெயில் காட்சிகள் நம்ம மிரள வைக்கிறார்.
அனிருத் இசையில் ரத்தமாரே தாலாட்டு. காவாலா குத்தாட்டம். பின்னணி இசையில் ரஜினி ரசிகனாக செய்கை செய்துள்ளார்.
நெல்சன் போன படத்தில் பட்ட அடியில் இருந்து சற்று பாடம் கற்றுக் கொண்டுள்ளார் .இது நெல்சன் படமா என்று வியக்கும் அளவுக்கு கொடுத்து இருக்கிறார் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் ரஜினி அவர்களை காண்பித்துள்ளார். இதுவரை எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் ரஜினி 48 வருட உழைப்புக்கு கிடைத்த மணிமகுடம் தான் இந்த படம்.நெல்சன் நீங்கள் ரஜினி ரசிகர்களிடம் மட்டும் இல்லை சினிமா ரசிகர்களையும் கவர்ந்து உள்ளீர்கள் பாட்சா மாதிரி இந்த படம் ரஜினியின் ஐகான் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய தலை சிறந்த நடிகர்கள் பலர் இடம் பெற்று உள்ளனர் இந்த படத்தில் இத்தனை மெகா நட்சத்திரங்களை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் நெல்சன்
மகனாக வரும் வசந்த் ரவி ரம்யா கிருஷ்ணன் குழந்தை விது மினர்வா அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
மொத்தத்தில் ஜெயிலர் – வின்னர் .மாஸ் மிரட்டல் சாதனை நாயகன் ரேட்டிங் 4.5/5
