Sunday, May 19
Shadow

ஜோஷ்வா இமை போல் காக்க – திரை விமர்சனம்! (Rank 4/5)

ஜோஷ்வா இமை போல் காக்க – திரை விமர்சனம்!

இயக்குனர் கௌதம் மேனன் அடுத்த படைப்பு ஜோஷ்வா இமை போல் காக்க படம் ரசிகர்களை மிகவும் கவனிக்க வைக்கிறது அதோடு ரசிகர்களை காக்கவும் வைக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக வருண் நாயகியாக ராஹ்கி இவர்களுடன் கிருஷ்ணா,கிட்டி,விசித்திரா,லிஸி அன்டனி,மன்சூர் அலி கான், திவ்யதர்ஷினி,மற்றும் பலர் நடிப்பில் பாடகர் கார்த்திக் இசையில் கதிர் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவனுக்கு எதிராக வாதாடும் பெண் வக்கீல் நாயகியை காப்பாற்றும் நாயகனின் கதைதான் ஜோஷ்வா. சர்வதேச கான்ட்ராக் கொலைகாரனான வருண் ஒரு கொலை சம்பவத்தில் நாயகியை சந்திக்கிறார். உடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒருசில சந்திப்புக்கு பிறகு அவரும் காதலிக்க தொடங்குகிறார். ஒருநாள் நாயகியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் கோபம் கொண்டு காதல் வேண்டாம் என்று சென்றுவிடுகிறார். இந்த நிலையில் மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தலைவனை அமெரிக்க போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் நாயகியை கொலை செய்ய கடத்தல்காரன் திட்டமிடுகிறான். இவர்களிடம் இருந்து நாயகன் நாயகியை காப்பாற்றினாரா? என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியுள்ளார் கௌதம் மேனன்.

கௌதம் மேனன் படங்கள் என்றாலே காதலும் ஆக்ஷனும் ரசிக்கும் வகையில் இருக்கும் இதிலும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் தூக்கல் . நாயகன்‌ வருண் சர்வதேச கான்ட்ராக் கொலைகாரன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உழைப்பு பாராட்ட வைக்கிறது. முக்கியமான காட்சிகளில் அவரது நடிப்பு நன்று. நாயகி ராஹி வழக்கமான கௌதம் பட‌நாயகி. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் அவரிடம். திவ்ய தர்ஷினி கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல்தான் நன்றாக செய்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணா உள்ளூர் கூலிப்படை தலைவனாக வருகிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் யான்னிக் பென் இருவரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர். ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் கவர்கின்றன. கார்த்திக்கின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓகே.

படத்துக்கு பின்னணி இசையும் பாடல்களும் பலம் குறிப்பாக பின்னனி இசை கதைக்கு பலம் சேர்த்துள்ளது அதே போல எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பலம் என்று தான் சொல்லணும் இருவரும் இயக்குனர் எண்ணம் புரிந்து செயல்பட்டுள்ளனர்.

படம் தொடங்கி இறுதி வரை பரபர ஆக்ஷன் தான் ஆனாலும் கௌதம் மேனன் படங்களில் இந்த படம் மேலும் ஒரு பரபரப்பு விறுவிறுப்பை கொடுக்கிறது . மொத்தத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க – காக்க காக்க. ரேட்டிங் 3.5/5