பொதுவாக ஹிப் ஹாப் ஆதி என்றாலே சமூகம் பார்வையுடன் தான் களம் இறங்குவார் இவரின் முந்தைய படைப்புகளும் அதை நிரூபித்துள்ளது.அதே போல இதிலும் ஒரு நல்ல கருத்தோடு களம் இறங்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை இயக்கி இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி
படத்துக்கு ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கண்ணோட்டத்தில் கடைசி உலகப் போரைப் பார்க்கிறோம். இது 2028; மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளன. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு சவாலாக உள்ளது. ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கும் இந்தியா கோபத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (எ)நட்டி, தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஊழல் கேமில் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி) முதல்வரின் மகள் கீர்த்தனாவை (அனகா) வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார்,
இதில் இருவருக்கும் காதல் மலர்கிறது. முதல்வரின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் கீர்த்தனா, எளியவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியே எடுக்க தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். இதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி என கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. குடியரசு இந்தியாவை கைப்பற்றி, கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் குடிமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் போது, இந்தியாவின் மீது வலுக்கட்டாயமாக கட்டுப்பாட்டை அடைய முயற்சிக்கிறது. அதிலிருந்து தமிழரசன் தன் சகாக்களுடன் தப்பித்து மூன்றாம் உலகப் போரை உலகின் ‘கடைசி உலகப் போர்’ ஆக எப்படி மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
கதாநாயகன் ஹிப்ஹாப் தமிழா அதி நுட்பமான ஹீரோயிசத்தை முயற்சி செய்திருக்கிறார். இருப்பினும் திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் கனகச்சிதமாக உள்ளது. தமிழரசனாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசி உலக போர் மூலம், தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய வடிவிலான கதை சொல்லல் ஈர்க்க கூடியதாக இருந்தது. வழக்கமான தமிழ் சினிமா பார்முளாக்களை உடைத்து, வித்தியாசமான முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்குறைந்த பட்ஜெட்டில் தரமான விஎஃப்எக்ஸ் அமைத்துள்ளார். முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதித்து காட்டி உள்ளார். அதற்காக ஹிப்ஹாப் ஆதிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா, கலை இயக்குனர் ஆர்.கே.நாகா, படத்தொகுப்பு பிரதீப் இ.ராகவ். ஸ்டண்ட் அமைப்பு மகேஷ் மேத்யூ, இசை மற்றும் பின்னணி இசை ஹிப்ஹாப் ஆதி உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை உருவாக்கி உள்ளனர்.மேலும், தானே எழுதி இயக்கியுள்ளார். அதை சிறப்பாகவும் செய்துள்ளார் nallabnadigqn மட்டும்பில்லை சிறந்த இயக்குனர் என்றும் நிரூபித்துள்ளார்.
நடராஜ் கதாபாத்திரத்தில், தனக்கே உரிய ஸ்டைலில் நட்டி(எ) நட்ராஜ் நக்கலான பேச்சு, நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
ரைசிங் ஸ்டார் ரிஷிகாந்தாக ஷாரா மற்றும் புலிப்பாண்டியாக அழகம் பெருமாள் ஒரு சில இடங்களில் நகைச்சுவையுடன் திரைக்கதையை நகர்த்துகிறார்கள்.
நாசர், அனகா, ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு ஹிப்ஹாப் ஆதியின் புதிய முயற்சிக்கு வலு சேர்த்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இந்த படத்தில் நடிகன் இயக்குனர் இசையமைப்பாளர் என மூன்று ரோலும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளார்.
மொத்தத்தில் கடைசி உலக போர் தமிழ் சினிமான்வின் வெற்றி முரசு