Monday, May 20
Shadow

காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் – திரைவிமர்சனம்

காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் – திரைவிமர்சனம்

இயக்குனர் முத்தையா படங்கள் என்றாலே உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படம் என்று சொல்லலாம் ஆனால் இந்த முறை மதத்துக்கும் மனித நேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார் அதோடு இந்தப் படத்தில் உறவுகளுக்கும் முக்கியத்துவம்  கொடுத்திருக்கும் படம் காதர் பாஷா என்கின்ற முத்துராமலிங்கம்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் சார்பாக வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க, பிஜி  முத்தையா இயக்கத்தில், ஆர்யா –  சித்தி இட்னானி மற்றும் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே  நடித்திருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

தாய் தந்தை இல்லாமல் தனியாக வாழும் நாயகி சித்தி இட்னானியை அவரிடம் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முரட்டு அண்ணியின் தம்பிகள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் சித்தி இட்னானி அவர்களை அறவே வெறுக்கிறார். காரணம் இவரின் அண்ணன் சாவிற்கு இவர்கள் குடும்பமும் அண்ணியும் தான் காரணம். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் காதர் பாட்சா ஆர்யாவை பார்க்க நாயகி செல்கிறார். ஆனால் போன இடத்தில் மனம் மாறி திரும்பி வந்து விடுகிறார். இதை அறிந்து கொண்ட ஆர்யா, ஜாமினில் வெளியே வந்து சித்தி இட்னானியை தேடி அவர் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் நாயகியின் முறை மாமன்களோடு ஏற்படும் தகராறில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மூன்று தலைக்கட்டுகளை போட்டு அடித்து வெளுத்து விடுகிறார். இதையடுத்து நாயகியின் பிரச்சனையை அறிந்து கொண்ட ஆர்யா நாயகிக்கு அரணாக அங்கேயே தங்கி விடுகிறார்.

இதற்கிடையே ஆர்யாவின் ஃப்ளாஷ் பேக்கில் அவரின் வளர்ப்பு அப்பா பிரபுவுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக அவரின் எதிரிகளை தன் சொந்த ஊரில் பந்தாடி விட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.

இப்படி ஆர்யாவின் எதிரிகளும் சித்தி இட்னானி எதிரிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஒன்று கூடி ஆர்யாவையும், நாயகி சித்தி இட்னானியையும் பழிவாங்க படையெடுக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து ஆர்யா சித்தி இட்னானியை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மீதி கதை.

 விறுவிறுப்பான திரைக்கதைகள் படத்தை நகர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதிகமான சண்டைக் காட்சிகள் அருமையான பாடல்களோடு இந்த படத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம் ஆனால் ஆனால் முத்தையாவின் ட்ரீட் மார்க் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது உறவுமுறைக்கு அற்புதமான ஆழமான ஒரு கதையை கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம் அதோடு மதத்தையும் மத நல்லிணக்கத்தையும் எடுத்துக்காட்டாக சொல்லி இருக்கிறார்.

ஆர்யா இந்த படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் அதேபோல நடிப்பில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் அதேபோல சண்டை காட்சிகளிலும் மிக ஆக்ரோஷமாக சண்டை காட்சிகளை சண்டை போடுகிறார்.

நாயகி சித்தி  நான் அழகில் மட்டுமல்ல நடிப்பிலும்  மிளிர்கிறார் தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல நடிகை என்று சொல்லலாம் .

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் பிரபு ஆடுகளம் நரேன் போன்றவர்கள் நடிப்பு அருமை

படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொன்னால்  ஜிவி பிரகாஷ் இசை பாடல்கள் அனைத்தும் அருமை அதிலும் கரி கொழம்பு வாசம் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

முத்தத்தில் காதர் பாட்ஷா என்கின்ற ராமலிங்கம் ஒரு முறை பார்க்கும் படமாக அமைந்துள்ளது உறவுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனர் முத்தையாவை பாராட்டலாம்