
இந்தவார ரிலீசில் அனைவரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் என்றால் அது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மார்கன் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் .
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ,தீப்ஸிகா சமுத்திரகனி, பிரிகேடியா, அஜய் திஷான், பிரித்திகா கனிமொழி மற்றும் பலர் நடிப்பில் விஜய் ஆண்டனி இசையில் லியோ ஜான்பால் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் மார்கன்
படத்தின் ஆரம்பத்திலே ஒரு பெண்ணை கொலை செய்கிறான் அவளின் பிணத்தை குப்பை தொட்டியில் போடுகிறான்.
அந்த பிணம் உடல் முழுவதும் கருத்து காணப்படுகிறது.இந்த கொலை இந்தியாவையே பரபரப்பாகிறது. இந்த கொலையை விஜய் ஆண்டனிக்கு தெரியவர அவர் உடனடியாக இந்த கொலையை நான் துப்பு செய்கிறேன் என்று சொல்ல இந்த கொலை சென்னையில் நடந்து இருக்கு டெல்லியில் இருக்கும் உங்களுக்கு என்ன என்று போலீஸ் சொல்ல ஆனாலும் நான் இந்த கேசை நான் தான் துப்பு துல்லகுவேன் என்று சென்னை வருகிறார். இந்த கொலையை யார் செய்யாதது என்ற துப்பை கண்டு பிடித்தாரா என்பது தான் மீதிகதை
எடிட்டர் லியோ ஜான் பால் இந்த படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து இருக்கிறார். முதல் படம் என்பது மிக முக்கியம் ஆனால் நாம் எதிர்பார்த்த விஷயங்கள் எதுவும் இல்லை கதைக்கு தேவையான நட்சத்திரங்களும் இல்லை
விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் த்ரில்லராக தொடங்கி, அந்த பாதையில் நன்றாகவே செல்ல ஆரம்பிக்கிறது. ஆனால், படத்தில் பல தற்கோள்கள் உள்ளன. திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு பதட்டமாக இல்லை — இது சாதாரண ஒரு த்ரில்லர் படமாகவே மாறுகிறது. இயக்குநர் எந்த புதிய முயற்சியையோ, புதிய உத்தியையோ கொண்டு வரவில்லை.
இது படத்தின் முதல் பாதி மட்டுமே — இரண்டாம் பாதி எப்படி அமைகிறது என்பதை பார்ப்போம்.
மார்கன் இடைவெளிக்குப் பிறகும் படத்தில் எந்த ஒரு புதுமையும் இல்லை சுவாரிசமும் இல்லை ஏற்கனவே பார்த்த காட்சிகள் எதிர்பார்த்த திரைக்கதைகள் இல்லை திரில்லர் படத்திற்கான சஸ்பென்ஷன் படத்தில் இல்லை கிளைமாக்ஸ் காட்சிக்கு 20 நிமிடத்திற்கு முன்னே யார் குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளார்கள் சோ சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை மார்கன் எதிர்பார்ப்புக்கு உரிய படம் இல்லை
படத்திற்கு ஒரு ஆறுதல் பின்னணி இசை அதே போல விஜய் ஆண்டனி நடிப்பு அவருடன் பயணிக்கும் மகாநதி சங்கர் அவரின் பாத்திரத்துக்கு மதிப்பை கொடுத்து இருக்கிறார் பிரேகிடியா கோழி குஞ்சுக்கு போலீஸ் வேடம் போட்டது போல் உள்ளது.
மொத்ததில் மார்கன் தலைப்பில் உள்ள கம்பெரம்ன்படதில் இல்லை
