Sunday, September 24
Shadow

மார்க் ஆண்டனி – திரைவிமர்சனம் (திரையரங்கில் அதகளம்) Rank 4.5/5

மார்க் ஆண்டனி – திரைவிமர்சனம்.


விஷால் எஸ்.ஜே. சூர்யா,கிங்ஸ்லி, சுனில், செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா,ரித்து வர்மா அமரரும் பலர் நடிப்பில் ஜி.வி.குமார் இசையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மார்க் ஆண்டனி

மிக பெரிய டான் கொடுமைக்கார டான் தன் மனைவியை கொன்றவன் அவனை திருத்த வேண்டும் இல்லை கொலை செய்யவேண்டும் என்று முயற்சிக்க நினைக்கும் மகன் மகனோ ஒரு அப்பாவி அந்த கொடுமைக்கார டானை திருத்தினான இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.

இயக்குனர் ஆதிக் அவர்களை மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு படம் அருமையான கதை களம் மிக அற்புதமான திரைக்கதை மிக சிறந்த நடிகர்கள் பட்டாளம் இசை இப்படி எல்லா விதத்திலும் இவர் மிக அருமையான தேர்வு மூலம் தனி முத்திரை பதிந்துள்ளார். இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று விட்டார் என்று சொன்னால் மிகையாகாது. இந்த படத்தின் கதையை இயக்குனர் மிக சிறப்பாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்லணும் கத்தி மேல் நடப்பது போல ஒரு கதை கொஞ்சம் விட்டால் இந்த கதை சீரியஸ் ஆகா மாறிவிடும் கொஞ்சம் விட்ட இந்த காமெடியாக மாறிவிடும் ஆகவே மிகவும் சிறப்பாக ஒரு பாண்டாசி படமாக மிக அற்புதமாக இந்த கதையாய் கையாண்டுள்ளார்.

படத்தின் நாயகன் என்னவோ விஷால் அனால் படைத்தல் முழுவதும் ஆட்க்கொண்டது எஸ்,ஜே ,சூர்யா தான் இவர்தான் படம் முழுவதும் ரசிகர்களை வசப்படுத்துகிறார்.குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கத்தை அதிர செய்கிறது.இப்படி ஒரு கதாபாத்திரத்தை விஷால் விட்டுக்கொடுத்ததுக்கு நிச்சயம் அவரை பாராட்டிடவேண்டும்.

எஸ்ஜே சூர்யா என்ன நடிகன்யா. சும்மா தெறிக்க விட்டுள்ளார்.‌ நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அப்பாவாக அதகளம் செய்தாலும் மகனாக வரும் எஸ்ஜே சூர்யா அட்டகாசம். அதுவும் அவரது நடிப்பும் உடல்மொழியும் பிச்சு உதறியுள்ளார்.

சில்க் ஸ்மிதா வரும் காட்சி திரையரங்கில் வெடிச் சத்தம். முதல் பாதி முதல் அரை மணி நேரம் பொறுமையாக செல்கிறது.‌ இடைவெளி காட்சி யூகித்ததுதான் என்றாலும் நன்றாக இருந்தது.

தனது முந்தைய படங்களை போல் இல்லாமல் ஒரு அருமையான பொழுதுபோக்கு கதையை ரெடி செய்து நல்ல படமாக கொடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். லாஜிக் மறந்து திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் படம் உள்ளது.‌ விஷால் அப்பா, மகனாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.‌ மகனாக அவரது நடிப்பு சற்று மிகையாக தெரிந்தாலும் அப்பாவாக பக்காவாக நடித்துள்ளார்.

படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர் குறிப்பாக சுனில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்று சொல்ல வேண்டும் அதே போல ரித்து வர்மா மிக சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.கிங்ஸ்லி நிழல்கள் ரவி ஒய்.ஜீ .மகேந்திரன் அபிநயா அனைவரும் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் பலம் என்று சொன்னால் காமிரா எடிட்டிங் காலை இயக்குனர், சண்டை காட்சிகள் என்று அடிக்கி கொண்டேபோகலாம் படத்தின் மிக பெரிய பலம் என்று சொன்னால் அது ஜி.வி.பிரகாஷ்குமார் இசை பின்னை இசையிலும் சரி பாடல்களும் நம்மை மிரள வைக்கிறார். அதோடு காலத்துக்கேற்ப இசையை கொடுத்து இருப்பது மிக அருமை

படத்தின் மைனஸ் என்று சொன்னால் நீளம் மட்டும் தான்