
மருதம் – திரைவிமர்சனம்
விதார்த் படம் என்றாலே ஒரு தரமான படமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை அதுபோல தான் இந்த மருதம் திரைப்படம் அறிமுக இயக்குனர் V. கஜேந்திரனின் அட்டகாசம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கார்.
இந்த படத்தில் விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ் சரவண சுப்பையா மற்றும் பலர் நடிப்பில் வி கஜேந்திரன் இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் அருண் கே சோமசுந்தரம் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
விவசாயம் தான் தன் உயிர் தன் வேள்வி என்று உழைப்பவர். விதார்த் இவர் பரம்பரையின் நிலத்தையில் விவசாயம் செய்து வருகிறார் அதுவும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் செய்து தன் குடும்பத்தை மிக சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என்று உதாரணமாக அந்த கிராமத்துக்கே வாழ்பவர். அப்படிப்பட்ட அவர் அவருக்கு நிலத்துக்கும் ஒரு பிரச்சனையில் தனியார் வங்கி மூலம் உருவாகிறது இதனால் அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது அதை அவர் எப்படி சமாளிக்கிறார் அந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
படத்தின் நாயகன் விதார்த் தான் ஒரு தலைசிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்தில் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது விதாத் என்று தான் சொல்ல வேண்டும் விதார்த் இல்லை என்றால் இந்த படத்தை கலைக்களம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு ஒரு சிறப்பான நடிப்பின் மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார். இயக்குனரின் நாயகன் என்பதை மீண்டும் இந்த பழத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். காட்சிக்கு காட்சி நம்மை நெகிழ வைக்கிறார். பல இடங்களில் நாமும் இப்படி போல ஒரு நேர்மையாக மனிதராக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நம்மளுக்குள் கொண்டு வருகிறார்.
விதார்த்துக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ரக்ஷனா விதார்த்தத்திற்கு மிக பக்க பலமாக இருந்து நடிப்பின் மூலம் நம்மை கவருகிறார். இயக்குனர் கொடுத்ததை தனக்குள் மிக சிறப்பாக உள்வாங்கி அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம்.
நநடிகர் மாறன் சில காட்சிகளே வந்தாலும் நம்மளை சிரிக்கவும் வைக்கிறார் அதே நேரத்தில் சிறப்பான நடிப்பு மூலம் நம்மை நேசிக்கவும் வைத்திருக்கிறார்.
படத்தின் மிக பெரிய பலம் இசை கதைக்கும் கதை களத்திற்கும் ஏற்ப இசையை கொடுத்திருக்கிறார் என் ஆர ரகு நந்தனன் ஒவ்வொரு பாடல்களும் காதுக்கு இனிமையாக உள்ளது அதேபோல பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அருண் கே சோமசுந்தரம் கண்ணுக்குள் குளிர்ச்சியான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இயக்குனரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு அதற்கேற்பான காட்சிகளை நம் கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார்.
அதே போல படத்தில் நடித்த அனைவரும் தன் தங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் இயக்குனரின் எண்ணம் அறிந்து அதற்கு ஏற்ப காட்சிகளை மிகைப்படுத்தி உள்ளனர் அதேபோல அந்த கிராமத்தில் உள்ள கிராம மக்களும் தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிக் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் V. கஜேந்திரன் தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் உண்மை சம்பவத்தை கையில் எடுத்துக் கொண்டு வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தேவையில்லாத காட்சிகள் ஒன்று கூட இந்த படத்தில் இல்லை படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்சிப்படுத்தி இருக்கிறார். நட்சத்திரங்களை தன் கட்டுக்கோப்பில் வைத்துக்கொண்டு காட்சிகளை மிக அற்புதமாக படமாக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தன் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் திரைக்கதை இதுவே இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு சாட்சி
மொத்தத்தில் மருதம் குறிஞ்சி
Rank 4/5