Monday, July 6
Shadow

மாயநதி – திரைவிமர்சனம் (இது ஒரு பாடம்) Rank 4/5


தமிழ் சினிமாவின் ரசிகளிடம் எப்போதும் ஒரு மிக பெரிய குறை அது என்ன என்றால் அறிமுகம் மற்றும் சின்ன நட்சத்திரங்கள் படங்களை வரவேற்ப்பதில்லை அதாவது அந்த படங்கள் சிலரின் உந்துதலில் தான் அரங்கத்துக்கு போகிறார்கள் .இதனால் பல நல்ல படங்கள் வெற்றியடைவதில்லை. இது தமிழ் சிநேமவிப் சாபக்கேடு என்று கூட சொல்லலாம். ஆம் பல மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வந்த இடம் போன இடம் தெரியாமல் போய்யுள்ளது . தயவுசெய்து சின்ன படங்களை பாருங்கள் அதில் தான் மிக சிறந்த கதைகள் மற்றும் திறமை வாய்ந்த நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் உங்கள் பார்வை சின்ன படங்களின் மீது விழாததால் பல திறமைசாலிகளை நாம் இழந்து இருக்கிறோம். என்னடா மாயநதி திரைவிமர்சனம் என்று பார்த்தல் வேறு எதோ எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று யோசிக்காதிர்கள் இந்த படமும் மிக சிறந்த கதையம்சம் கொண்டபடம் தயவுசெய்து இந்த பாருங்கள் பார்த்து உணகளுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள் எனக்கு மிகவும் பிடித்த இந்த படம் மற்றவர்களிடம் பொய் சேரவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் ஆரம்பிக்குறேன்.

மிக சிறந்த கதையம்சம் கொண்ட ஒரு படம் என்றால் அது மாயநதி சிறந்த கதை வித்தியாசமான திரைகதை திறமையான நட்சத்திரங்கள் அற்புதமான பாடல்கள் கோதண்ட ஒரு நல்ல படம் தான் இந்த மாயநதி அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படம் குறிப்பாக இன்றைய மாணவர்கள் ஏன் பெற்றோகள் வாலிபவயசு என்று திரியும் இளவட்டங்கள் பார்க்கவேண்டிய ஒரு பாடம்.

இந்த படத்தில் அபி சரவணன் கதையின் நாயகனாக நாயகியாக வெண்பா, அப்பாவாக ஆடுகளம் நரேன், நாயகனின் நண்பனாக அப்புக்குட்டி மற்றும் பலர் நடிப்பில் ராஜ பவதாரிணி இசையில் ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவில் அசோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி இருக்கும் ஒரு சிறந்த படம் மாயநதி .

மயிலாடுதுறையில் தமிழ் ஆசிரியர் ஆடுகளம் நரேன் அவருக்கு ஒரே மகள் மனைவி மகள் பிறந்த அடுத்த நிமிடமே இறந்துவிடுகிறார். தன் மகள் தான் இனி வாழ்கை என்று வேறு திருமணம் கூட செய்யாமல் வாழ்கிறார். மகளும் தந்தையின் சொல்படி தந்தையின் நிலைமையறிந்து படிப்பில் மிக சிறந்த திறமைசாலியாக இருப்பவள். மகள் படிப்புக்காக தன் பதவி உயர்வு தலைமை ஆசிரியல் பதவியையும் உதறிவிட்டு வாழும் தந்தை இப்படி இவர்களின் வாழ்வில் மிகவும் ஆனந்தமான வாழ்கையில் காதல் என்ற புயலால் ஏற்படும் பாதிப்பு தான் இந்த படத்தின் மீதி கதை

படிப்பில் மிகவும் திறமைசாலியான வெண்பா பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலாவது வந்த மகள் தன் தாயின் இறப்பால் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் படிப்பவள் அதற்க்கு தேவையான உதவிகளையும் அளவில்லாத அன்பை செலுத்தும் அப்பா தினமும் பள்ளிகூடத்துக்கு ஆட்டோவில் செல்லும் வெண்பா எப்போதும் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனரக்கு ஏற்படும் ஒரு விபத்தால் மாற்றாக அதே ஊரில் வாலிப வட்டமான அபி சரவணன் ஆட்டோ ஓட்டுகிறார். அப்போது அபிசரவணனின் நல்ல எண்ணங்கள் வெண்பாவுக்கு பிடிக்க அவரிடம் நல்ல பழகுகிறார் . இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு உண்டாகிறது. அப்போது வெண்பாவின் நட்பினால் ஏற்படும் ஒரு விபரீதம் அதில் இருந்து காப்பாற்றுகிறார் அபி சரவணன் இதனால் அவர் மீது காதல் வயபடுகிறார்.
இந்த காதல் அபி சரவணனின் வற்புறுத்தலால் திருட்டு கல்யாணத்தில் முடிகிறது இந்த கல்யாணத்தால் தந்தை வீட்டை விட்டு வெளியேறுகிறார் இவர் மீண்டும் தன்மகளிடம் வந்தாரா வெண்பா டாக்டர் ஆனாரா என்பது மீதிகதை

படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதையும் இசையும் என்று சொன்னால் மிகையாகது இயக்குனர் காட்சிக்கு காட்சி மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார். அதே போல படத்துக்கு மிக பெரிய பலம் ஆடுகளம் நரேன் மற்றும் வெண்பா இந்த இருவரும் தான் படத்தை தாங்கிபிடிதுள்ளனர், இவர்களோடு மிகவும் சிறப்பாக பயணித்துள்ளார் அபி சரவணன்

படத்தை முழுக்க முழுக்க தாங்கி பிடித்து இருப்பது நாயகி வெண்பா ஏற்கனவே இந்த பொண்ணு இரண்டு படங்கள் நடித்து இருந்தும் நமக்கு தெரியாமல் போன இந்த பொண்ணு இனி தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு நிரந்த இடத்தை பிடிப்பார் சில இடங்களில் அந்த காலத்து காவிய நடிகைகளே போல தெரிகிறார். மிகவும் தேர்ச்சியான ஒரு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் வெண்பா இனி வரும் காலங்களில் இவரை பல படங்களில் பார்க்கும் சந்தர்பம் கிடைக்கும் அதோடு இந்த படத்தில் அவரின் நடிப்புக்கு நிச்சயம் விருதுகள் காத்திருக்கிறது நிச்சயம் தொலைகாட்சிகள் விருது கிடைக்காது காரணம் அவர்கள் பார்க்கும் கமர்சியல் இந்த பெண்ணிடம் இல்லை அரசு விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும்.

காதலனாக வரும் அபி சரவணன் நாயகி மற்றும் அப்பா அடுகளம் நரேன்விட கொஞ்சம் குறைவான கதபாத்திரம் தான் அனால் மிக நிறைவாக செய்துள்ளார்.இவர் இதற்க்கு முன் எத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் இந்த படம் பொருத்தவரைக்கும் அவருக்கு நிச்சயம் ஒரு முத்திரைபதிக்கும் படமாக இருக்கும் என்பதில் அச்சம் இல்லை தன் கதாபாத்திரம் அறிந்து பலம் சேர்த்துள்ளார்.

அடுத்து படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது ஆடுகளம் நரேன் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்லணும் அப்படி ஒரு முதிர்சியான நடிப்பு இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைப்பாரா என்ற ஏக்கத்தை உண்டுபன்னியுள்ளார். இவரெல்லாம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் சொல்லணும் இயக்குனர்களின் வரம் என்றும் சொல்லகூடிய ஒரு நட்சத்திரம் தான் இவர்
படத்தின் அடுத்த பலம் இசை நேர்த்தியான பின்னணி இசை அதோடு மிக சிறந்த ஆழமான கருத்துகள் கொண்ட பாடல் வரிகள் ராஜாவின் மகள் என்பதை நிருபித்துள்ளார் ராஜ பாவதராணி அதோடு ஒளிப்பதிவாளர் ரீநிவாஸ் தேவாம்சம் மேலும் அழகு சேர்த்துள்ளார்.

எல்லோரையும் நாம் பாராட்டிய நாம் படத்தின் தலைவன் இயக்குனர் அசோக் தியாகராஜனை பாராட்டாமல் இருக்க முடியாது அறிமுகமே அசத்தல் படம் அருமையான கதையம்சம் மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் திறமையான நடிகர்கள் மூலம் ஒரு அற்புதமான படத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்..இயக்குனர் படம் பார்த்து வெளியில் வரும் ஒரு அற்புதமான உணர்வை கொடுத்துள்ளார் அதோடு நம் கண்களில் ஈரம் கசியும்
மொத்தத்தில் மாயநதி ஒரு சுந்தர நதி