இந்த பொங்கல் ரசிகர்களுக்கு மிக சிறப்பான பொங்கல் குறிப்பாக சினிமா ரசிகர்களுக்கு காரணம் ரிலீஸ் ஆனா மூன்று நேரடி தமிழ் படங்கள் ரசிகர்களை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.மூன்றும் மூன்று விதமான படங்கள் என்பது மிக பெரிய விஷயம் அதிலும் மிஷன் சாப்டர் ரசிகர்களை மிகவும் கவரும் காரணம் இதில் செந்திமென்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம்
விஜய்யின் இயக்கத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா, பரத் கோபன்னா, அபிஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மிஷன் சாப்டர்1.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சந்தீப் கே விஜய்.
லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தனது 5 வயது மகளுக்கு ஆப்ரேஷன் செய்வதற்காக சென்னையில் இருந்துகிளம்பி இலண்டன் வருகிறார் அருண் விஜய். அங்கு, ஒரு மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்குகிறார்கள்.
அங்கு பணம் வாங்க செல்லும் போது, வழிப்பறிகளால் சிக்கிக் கொள்ள அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் அருண் விஜய். இதனால் இலண்டன் போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்.இதில் இருந்து தன மகளுக்கு ஆபரேஷசன் செய்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை
அருண் விஜய் இந்த தான் ஒரு நல்ல நடிகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். ஒரு சிறந்த தந்தையாகவும் சரி ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் நடித்து இருப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது.
ஆக்ஷன் என்றால் இனி இவரைதான் அழைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் கஷ்டமான ஆக்ஷன் காட்சிகளை அடித்து துவம்சம் செய்திருக்கிறார் அருண் விஜய்.
எத்தனை பேர் வந்தாலும் அடிப்பதற்கான ஃபுல் எனர்ஜியோடு படம் முழுக்க வந்து நிற்கிறார் அருண் விஜய். குழந்தை மீதான பாசத்திற்காக அனைத்தையும் இழந்து நிற்கும் காட்சியாக இருக்கட்டும், தனது மகளை விட நாட்டு மக்களுக்காக நிற்கும் காட்சியாக இருக்கட்டும் என பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய்.
ஆக்ஷனில் தனது பலத்தை காட்டியிருக்கிறார் ஏமி ஜாக்சன் இதுவரை கவர்ச்சியில் வளம் வந்தவர் இந்த படத்தில் எனக்கும் நடிக்க தெரியும் என்று நிரூபித்துள்ளார்.மலையாள நடிகையாக தனது கண்களில் நடிப்பை நிறுத்துகிறார் நிமிஷா.
வில்லனான பரத் கோபன்னா, அமைதியாக வந்து அதகளம் செய்திருக்கிறார். இவரா அபிஹாசன் (நாசர் மகன்) என்று கேட்கும் அளவிற்கு சிங் கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறனை நிரூபித்திருக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.?
படத்தில் இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷன் பக்கம் திரும்பியது கதையின் ஓட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறது.
வில்லனின் பின்னணி இசை அரங்கை அதிர வைக்கிறது. ஜி வி பிரகாஷின் இசை படத்திற்கு பக்கபலம்.
இடை வேளை காட்சிகளில் கண்களை விரிய வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக ஒரு தமிழ் சினிமாவை படைத்து வைத்திருக்கிறார் விஜய்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்குச் சென்றால், மிஷன் உங்களை நிச்சயம் திருப்திப்படுத்தும்.
ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு நின்று பேசியிருக்கிறது.
மிஷன் சாப்டர்1 – ஆக்சன் விருந்து