Sunday, May 19
Shadow

மூன்றாம் மனிதன் திரைப்பட விமர்சனம்!

மூன்றாம் மனிதன் திரைப்பட விமர்சனம்!

இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மூன்றாம் மனிதன். ஒரு அழகான குடும்பத்துக்குள் நுழையும் மூன்றாம் மனிதன் நுழைந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்பதை சொல்லும் படம் தான் மூன்றாம் மனிதன்.

சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் வீசப்பட்டுகிறது. இதை கே.பாக்யராஜ் தலைமையிலான
அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சந்தேகத்தின்‌பேரில் ராம்தேவ்வை அழைத்து போலீஸ் விவசாரிக்கிறது. அவர் தனது கதையை சொல்கிறார். அதில் ராம்தேவ், பிரணா இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. குடும்ப கடனை அடைக்க வெளியூர் செல்லும் ராம்தேவ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார். மனைவி பிரணா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் குடித்துக்கொண்டே இருக்கிறார். இதனால் பிரணாவுக்கும் போலீசான சோனியா அகர்வால் கணவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் ராம்தேவ் மனைவியை கண்டிக்கிறார். நீ குடியை நிறுத்து நான் இதை நிறுத்துகிறேன் என்கிறார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டு ஓடிப்போக நினைக்கும்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. எந்த சம்பவம் என்ன? கொலை செய்தது யார்? காரணம் என்ன என்பதுதான் இப்படத்தின் கதை.

ராம்தேவ் எழுதி இயக்கியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். குடிகாரனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குடிப் பழக்கம் மற்றும் தகாத உறவுகளால் ஒரு குடும்பம் எப்படி சீரழிந்து விடுகிறது என்பதை சொல்லியுள்ளார். படத்தின் வசனமும் நன்றாக உள்ளது. பாக்யராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்துவதற்கு இவரது பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. சோனியா அகர்வால் முதல் பாதியில் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். கணவன் மீது சந்தேகப்படும் கதாபாத்திரம். ஓரளவுக்கு நடித்துள்ளார். படத்தை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் பிரணா என்பவர் நடித்துள்ளார். மிகவும் நன்றாக நடித்துள்ளார். காமத்தின் உச்சத்தில் செல்லும் பெண்கள் மனது எப்படி அலைபாயும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் சான்று. அனுபவமிக்க நடிப்பை கொடுத்துள்ளார். இரண்டாம் பாதி மொத்தமும் இவர் மீதுதான். அதனை உணர்ந்து நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.‌ தப்பு செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெண்களும் தங்களது குழந்தைகளை ஒருமுறை நினைத்துக் கொண்டால் எந்தவித தவறும் நடக்காது என்பதை உணர்த்தியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீநாத், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார்,  ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் உள்ளிட்டோர் தேவையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
துர்காஸ் எடிட்டிங் ஓகே.
மணிவண்ணனின் ஒளிப்பதிவு கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களை அழகாக காட்டியுள்ளது. வேணு சங்கர்&  தேவ் ஜியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
அம்ரிஷின் பின்னணி இசை நன்று.

அருமையான கதையை தேர்வு செய்துள்ள இயக்குனர் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் மேலும் கவனம் ஈர்த்து இருக்கும். முயற்சிக்கு பாராட்டுகள்.