Monday, May 20
Shadow

பரம்பொருள் – திரைவிமர்சனம் (Rank 4/5)

தன் வினை தன்னை சுடும் என்ற பொன் மொழியை மையமாக கொண்டு வந்து இருக்கும் படம் தான் பரம்பொருள்

பரம்பொருள் படத்துக்கு ஏற்ப டைட்டல் தலைப்புக்கு ஏற்ப கதை என்று தான் சொல்லவேண்டும் நீண்ட நாளுக்கு பின் அமைதியான திரைக்கதையில் நீங்கள் பயணிக்க போகிறீர்கள் என்று தான் சொல்லவேண்டும் ஆர்பாட்டம் இல்லாத திரைக்கதை மூலம் இயக்குனர் நம்மை கட்டிபோடுகிறார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சரத்குமார் வில்லனாக நடிக்கும் படம் இந்த படம் வேலை இல்லா பட்டதாரி 2 படம் மூலம் அறிமுகமான அமிதேஷ் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். அமைதியான நடிப்பில் அற்புதமாக நடித்து இருக்கிறார். என்றுதான் சொல்லணும்.

மற்றும் இந்த படத்தில் காஷ்மீரா பரதேஸ் அம்மா க்ரியேஷன் சிவா பாலாஜி சக்திவேல் வின்சென்ட் அசோக் மற்றும் பலர் நடிப்பில் யுவான்ஷங்கர் ராஜா இசையில் சி.அரவிந்ராஜ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் பரம்பொருள்

சரத்குமார் மற்றும் நாயகன் அமிதேஷ் இருவருக்குள் நடக்கும் மௌன போராட்டம் தான் இந்த படம் என்றும் சொல்லலாம்.

சரி படத்தின் கதையை பார்ப்போம்

நாகப்பட்டினம் ஒரு கிராமத்தில் வயலில் தென்னை மரம் நடும்போது ஒரு சோழ காலத்து புத்தர் சிலை கிடைக்கிறது அதை அந்த விவசாயி திருட்டுத்தனமாக விற்கும்போது அந்த விவசாயியை கொலைசெய்துவிட்டு இந்த சிலையை ஒரு அருங்காட்சியம் நடத்தும் வியாபாரி கடத்தி கொண்டுப்போகிறார்.
இந்த சியையின் விவரம் அறிந்த ஹீரோ அமிதேஷ் திருடுகிறார். இதையறிந்த போலிஷ் இன்ஸ்பெக்டர் அமிதேஷ்யை மிரட்டி சரத்குமார் இந்த சிலையை கள்ளத்தனமாக விற்க முயல்கிறார்கள். இதற்கிடையில் தன தங்கை மிகவும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் இருக்கிறார் இதற்காக தான் நான் இந்த சிலையை திருடினேன். என்று சொல்ல சரி இந்த சிலையை நாம் இருவரும் பங்கு போட்டுக்கொள்வோம்.என்று இருவரும் சேர்ந்து விற்க முயல்கிறார்கள். இந்த சிலை விற்றார்களா இல்லை என்ன நடந்தது என்பது தான் மீதி கதை. இயக்குனர் இந்த கதைக்குள் மேலும் ஒரு சுவாரசியமான ஒரு கதை வைத்துள்ளார் அதைவைத்து தான் இந்த படத்தின் திரில்லரே அமைந்துள்ளது.

இயக்குனர் சி.அரவிந்தராஜ் ஒரு தெளிவான கதை எடுத்துக்கொண்டு அற்புதமான திரைக்கதை அமைத்து. தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு தரமான படம் கொடுத்து இருக்கிறார். கதையைவிட்டு எந்த இடத்திலும் நகராமல் அற்புதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அரவிந்தராஜ்.

சரத்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் வில்லன் பாத்திரம் சிறப்பாக செய்துள்ளார் இருந்தும் அவர் பாடி லாங்குவேஜ் இந்த படத்தில் எடுபடவில்லை. கொஞ்சம் நெளிய வைத்துள்ளது அவரா என்று சில இடங்களில் யோசிக்க வைக்கிறார்.

அமிதேஷ் கதையின் நாயகனாக வளம் வருகிறார்.அமைதியான நடிப்பில் அப்பாவி போல ஒரு தோற்றத்தில் ஒரு விதமான நடிப்பில் ரசிகர்களை கவருகிறார் என்று தான் சொல்லணும். கொடுத்த வாய்ப்பை மிக சிறப்பாக செய்துள்ளார்.

படத்தில் நடித்த மற்ற அனைவரும் படத்துக்கு பலம் என்று தான் சொல்லணும். அதேபோல படத்துக்கு யுவான் ஷங்கர் ராஜா இசை பலம் பின்னை இசையையும் பாடல்களும் பலம்.

மொத்தத்தில் பரம்பொருள் ரசிகர்களை கவர்கிறது.