Sunday, May 19
Shadow

பதான் – திரைவிமர்சனம் (வியப்பு) Rank 4/5

உலக சினிமா அதாவது ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் டாம் குரூஸ் போன்றவர்களின் படம் பார்த்து வியந்தவர்களுக்கு இப்படி ஒரு இந்திய படமா என்று வியக்கும் அளவுக்கு ஒரு படம் தான் பதான் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷ்ன் திரில்லர் படம் அதோடு ஒரு தேச பக்தியை கலந்து கொடுத்து இருக்கும் படம் இளைஞர்களின் திருவிழா என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு பிரமாண்டம் அதோடு நல்ல தேசபக்தி கதை கொண்ட படமாக அமைத்துள்ளனர்.

ஷாருக்கானின் பதான், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது.  சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் ஷாருக்கான் அதிரடி ஹீரோவாக தூள் கிளப்பி உள்ளார்.

இந்த படத்தை நாம் பார்க்கும் போது நேரடி தமிழ் படம் போல ஊருவாகியுள்ளனர்.அதுவும் ஷாருக்கான் அறிமுக காட்சியில் தமிழில் பேசுடா என்று சொல்லும் போது அரங்கம் அதிருகிறது.
சரி படத்தின் கதையை பார்ப்போம்;

இந்தியாவின் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகாம், ஒரு கட்டத்தில் தேசத்துக்கு எதிராக மாறுகிறார்.  இந்தியாவை அழிக்க புறப்படுகிறார் இன்னொரு உளவாளியான ஷாருக்கான். ஆனால் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் தீபிகா படுகோன். இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலை.

இந்த இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு, மீளும் அவர், ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து உதைத்து, இந்தியாவுக்கு எதிரான சதியை முறியடிப்பதே கதை.

8 பேக்ஸ் உடம்புடன் ஷாருக்கான் மிரட்டுகிறார். அதோடு சண்டை காட்சிகளில் நம்மை மிரட்டுகிறார். நடிப்பில் நம்மை நியிழ வைக்கிறார். காதல் காட்சிகளில் நம்மை சொல்ல வைக்கிறார். அதே போல செண்டிமெண்ட் காட்சிகளிலும் நம்மை உருக வைக்கிறார்.  இன்னொரு பக்கம், ஜான் ஆபிரகாமும் தனது கட்டுடல் காட்டி அதிரடிக்கிறார். அதோடு தான் சிறந்த நடிகன் என்று காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். இருவரும் ரசிகைகளை கவர்வார்கள் என்பது உறுதி.

இவர்களுக்கு நான் சளைத்தவர் இல்லை என தீபிகா படுகோன், பிகினி உடையில் உலா வருகிறார். இது ரசிகர்களுக்கு விருந்து. பிகினி உடையில் ஆபாசமாக இல்லாமல் நம்மை ரசிக்க வைக்கிறார்.  அதோடு சண்டை காட்சிகளில் ஷாருக்கான் ஜான்க்கு நிகராக சண்டை போட்டு நம்மை மிரளவைக்கிரார்.

படம் முழுதும் நமக்கு  உலகைத்தை சுற்றி காண்பிக்கிறார்கள் படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் ஆனாலும் நம்மை சோபிக்க வைக்கவில்லை ஹெலிகாப்டர் மற்றும்  ரயில்யில் சண்டை காட்சிகள் நம்மை மிரள வைக்கிறது.

கேமியோ ரோலில் வரும் சல்மான் கான் காமெடி கலந்த சண்டைக்காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவு அதே போல மிரள வைக்கும் சண்டை காட்சிகள்

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறார். ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரமும் நம்மை மிரள வைக்கிறது. பல இடங்களில் நமக்கு இந்திய படம் பார்கிராமே என்ற எண்ணத்தை உண்டு பண்ணி இருக்கிறார்.

மொத்தத்தில் லாஜிக் இலாவிட்டாலும், தனது திரைக்கதை மேஜிக்கால் ரசிக்கவைத்து விடுகிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.

சிறுவயதில்  ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் இப்படத்தை   கண்டிப்பாக ரசிக்கலாம்.