Sunday, July 5
Shadow

பென்குயின் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.2/5)

கர்ப்பினி பெண் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது முதல் குழந்தையை தேடி செல்வதே இந்த படத்தின் கதை.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

படத்தில் ரேதிம் (கீர்த்தி சுரேஷ்) கர்ப்பிணி பெண், தனது மகன் அஜய்-யை தேடி செல்கிறார்.ரேதிமின் முன்னாள் கணவராக ராகு (லிங்கா), தற்போதைய கணவராக கவுதம் (மதமபதி ரங்கராஜ்) நடித்துள்ளார். படத்தில் உள்ள கதாபத்திரங்கள் போலீஸ் உள்பட அனைவரும் கீர்த்தி சுரேஷின் மகன் இறந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் இதை நம்பாமல், மகன் எங்கோ ஒரு இடத்தில் உயிருடன் இருப்பதாக நம்பி தேட செல்கிறார்.

படத்தின் கதை களம் சுவரஸ்யமாக இருந்திருக்கலாம். ஒரு சாதாரண கதையை நீளம். படத்தின் இசை மொத்ததில் இசைக்கவே இல்லை. படத்தின் கதாபாத்திர உறுதியாக இல்லை. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் சரியாக அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

படத்தின் பிளஸ் – கீர்த்தி சுரேஷின் நடிப்பு, நாயின் நடிப்பு

படத்தின் மைனஸ் – கதையின் ஆழம் குறைவாக இருப்பது

மொத்ததில் பென்குயின் கீர்த்தி சுரேஷுக்காக  ஒருமுறை பார்க்கலாம்….