Sunday, May 19
Shadow

பூசாண்டி வரான் – திரை விமர்சனம் (Rank3/5)

ஜே.கே.விக்கி இயக்கத்தில் மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகர், ஹம்சனி பெருமாள் உள்ளிட்டோர் நடித்து வெளி வந்துள்ள படம் பூசாண்டி வரான். மலேசியாவில் பழங்கால பொருட்களை வாங்கி சேகரித்து வருபவர் அன்பு. அவருடன் நண்பர்களாக ஷங்கர் மற்றும் குரு ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் ஒருநாள் ஆவியுடன் பேச ஆசைப்பட்டு ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். பழங்கான நாணயத்தை வைத்து விளையாடும்போது மல்லிகா என்ற ஆவி இவர்களிடம் பேசுகிறது. தன்னை பற்றியும் தான் எவ்வாறு இறந்தேன் என்பது பற்றியும் கூறுகிறது. ஆவியுடன் பேச மற்ற இருவரும் ஆர்வம் காட்ட குரு மட்டும் இதற்கு மறுக்கிறார். மேலும் அந்த நாணயத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே எறிந்துவிடுகிறார். மறுநாள் குரு மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அவர் அருகே தூக்கி எறியப்பட்ட நாணயம் கிடக்கிறது. உடனே இருவரும் பயந்து அலரிக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறி விடுகின்றனர். இந்நிலையில் அமானுஷ்யமான விஷயங்களை பத்திரிகையில் தொடராக எழுதும் முருகன் என்பவர் இதுகுறித்து கேட்டறிந்து தனது புத்தகத்தில் எழுத குருவை தேடி வருகிறார். குருவும் நடந்ததை எல்லாம் முருகனிடம் சொல்கிறார். மூவரும் சேர்ந்து மல்லிகா பற்றி அறிந்து கொள்ள அவரது ஊருக்கு செல்கின்றனர். மல்லிகா பற்றி தெரிந்துகொண்டார்களா, குரு மரணத்திற்கு யார் காரணம், அந்த நாணயம் எப்படி வந்தது என்பதை த்ரில்லர் கலந்து சொல்லியிருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. மிகவும் சுவாரஸ்யமான கதையை அருமையான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக சொல்லியுள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்களின் பின்னணியோடு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

டஸ்டின் றிடுங்ஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் அம்சமாக உள்ளது. பூ சாண்டி என்பவர்கள் யார் என்பது குறித்தும் இதில் சொல்லியுள்ளனர். அசலிஷம்பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக உள்ளது.ஒவ்வொரு காட்சியையும் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்கி.