
ராமம்ராகவம் – திரை விமர்சனம்
பொதுவாக சமுத்திரக்கனி படங்கள் என்றாலே சமுதாய கருத்தை சார்ந்து இல்லை மிக சிறந்த குடும்பத்தை சித்திரமாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் ஒரு குடும்பச் சத்திரம் தான் ஏன் ஒரு பாச காவியம் என்று கூட சொல்லாம்
படத்தின் டைட்டில் எப்படி ஒரு புனிதம் இருக்கிறதோ ராமம் ராகம் அது போல் இந்த கதைகளும் ஒரு புனிதம் இருக்கிறது.
அப்பாவாக – சமுத்திரக்கனி. அம்மாவாக – பிரமோதினி.
மகனாக – தன்ராஜ் கொரனானி.
மோக்ஷா சுனில் ஹரீஸ் உத்தமன்
சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. பிரித்விராஜ். மற்றும் பலர் நடிப்பில்
அருண்சிலுவேறு இசையில் துர்கா கொல்லிபிரசாத் ஒளிப்பதிவில்
தன்ராஜ் கொரனானி, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ராமம் ராகவம்.
சமுத்திரகனி அரசாங்க உத்தியோகத்தில் நேர்மையான ஒரு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரே மகன் தன்ராஜ் ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லத்தோடு வளர்க்கிறார்கள் அப்பா சமுத்திரக்கனி கொஞ்சம் கண்டிப்பானவராக இருந்தாலும் அம்மாவின் செல்லத்தால் அம்மாவை கொடுக்கும் ஆதரவினால் மகனுக்கு இவரும் ஆதரவு கொடுக்கிறார். தன் மகன்தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தன் மகனை எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அவரோ தவறான பாதையில் செல்கிறார். அப்பா சொல்லும் சொல்லுக்கு எல்லாவற்றுக்கும் நேர் எதிர்மறையாகவே செய்பவர். தான் தொழில் தொடங்குவதாக கூறி அப்பா சமுத்திரகனிடம் ஐந்து லட்சம் கேட்பார் அவரும் கொடுப்பார் ஆனால் அதை தொழில் தொடங்காமல் கிரிக்கெட் பெட்டிங் தோற்றுவிடுவார். இதனால் அப்பாவின் கண்டிப்பு அவருக்கு பிடிக்காமல் அப்பாவையே கொலை செய்ய திட்டமிடுகிறார். அப்பா இறந்தால் அப்பாவின் வேலை சொத்து மற்றும் நமக்கு கிடைக்கும் என்று நட்பாசையில் அப்பாவையே கொலை செய்ய திட்டம் செய்கிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றினாரா அப்பாவின் வேலையில் அமர்ந்தார் என்பது தான் மீதி கதை.
சமுத்திரகனி எப்பவும் போல தன் நடிப்பு மூலம் நம்மை கவருகிரார். ஒரு சிறந்த அப்பாவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.இவரின் நடிப்பு நமக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறது. இந்திய சினிமாவுக்கு சமுத்திரகனி ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லணும்.
அம்மாவாக நடித்து இருக்கும் பிராமதினி சமுத்திரகனிக்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார். என்று சொன்னால் மிகையாகாது தமிழுக்கு புதிது என்றாலும் நடிப்பில் வசீகரிக்கிரார். இவரும் நடிப்பில் நம்மை பிரமிக்க வைக்கிறார்.
மகனாக நடித்து இருக்கும் தன்ராஜ் ஒரு மூர்க்க மகனாக மிகவும் எதார்த்தமாக நடித்து இருக்கிறார். தெலுங்கில் பல படங்கள் நடித்த தன்ராஜ் தமிழிலும் கலக்கியிருக்கிறார். முரட்டுதனம் இல்லாமல் அமைதியான ஒரு வில்லத்தனம் மூலம் நடிப்பில் அசத்துகிறார் அப்பாவை அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியேறி குடிக்கும் காட்சியிலும் சரி அப்பாவை கொலை செய்ய போடும் காட்சியிலும் சரி அதே தன் தவறை உணர்ந்து தவிக்கும் காட்சியிலும் நடிப்பில் நம்மை மிரட்டுகிறார்.
மோக்ஷா சுனில் ஹரீஸ் உத்தமன்
சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. இவர்களும் அவர்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
படத்தின் பலம் இயக்குனர் தன்ராஜ் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் என்று சொன்னால் மிகையாகாது.இயக்குனர் தன்ராஜ் கதை களம் திரைக்கதையும் சரி கத்தி மேல் நடப்பது போல இருக்கிறது கொஞ்சம் தவறு செய்தால் படத்தின் சாராம்சம் தப்பகிவிடும் அதை மிக நேர்த்தியாக செய்து இருக்கிறார். இயக்குனர். இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தேவையான ஒரு படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்
மொத்தத்தில் ராமம் ராவனம் புனிதம்