Sunday, May 19
Shadow

சான்றிதழ் – திரைவிமர்சனம் (தரம் நிறைந்த படம்) Rank 3.5/5)

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை  என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னாள் வெள்ளைச் சாமி என்பவரது மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.

கருவறை கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சட்டத்திட்டங்களும் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே, என்று மக்களை ஏங்க வைக்கும் விதத்தில் தனது கற்பனை கிராமத்தையே கதையாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.

வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி, தனது கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் ஒரு சில நல்ல அரசியல் தலைவர்களை நினைவுப்படுத்துகிறார்.

கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காட்சிகள் குறைவு தான் என்றாலும்,  இருவரும் நடிப்பில் குறிப்பாக காதல் காட்சிகளில் குளிர்ச்சியாக பயன்பட்டிருக்கிறார்கள். வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்கள்.

மற்றும் படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.அ தோடு ரவி மரியா. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் நகைச்சுவையில் கலக்கியுள்ளர்கள்.

இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனின் பாதை பழைய பாணியில் இருந்தாலும், அவருடைய கனவு மதிக்க கூடியதாக இருக்கிறது.

மொத்தத்தில் சான்றிதழ் சமுகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் தரமான பட்டியலில் இணையும் படம்