Sunday, May 19
Shadow

பிரபாஸை – திரை விமர்சனம் ! Rank 4/5

 

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சலார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கதை என்னவென்றால்.. தனது அம்மாவின் அஸ்தியை கரைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் துரத்துகிறது. வெளி நாட்டில் இருந்து இந்தியாவில் இருக்கும் மைம் கோபியின் உதவியை நாடுகிறார் ஸ்ருதி ஹாசனின் அப்பா. ஸ்ருதி ஹாசனை பிரபாஸிடம் சென்று பத்திரமாக இருக்க வைக்கிறார் மைம் கோபி. யாரையும் அடிக்க மாட்டேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்துள்ளார் பிரபாஸ். ஸ்ருதியை கடத்த வந்த கும்பலை ஒருமுறை அம்மாவின் அனுமதியுடன் அடித்து துவைக்கிறார். இரண்டாவது முறையும் காப்பாற்ற பிரபாஸ் யார் என்று கேட்கிறார் ஸ்ருதிஹாசன். ஃபிளாஷ் பேக்கில் கான்சார் என்ற ஒரு நாடு அதில் நடக்கும் மன்னராட்சி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இரண்டு குழுக்களுக்குள் நடக்கும் சண்டை . இடையில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் நட்பு. நண்பன் பிரித்விராஜுக்கு ஏற்படும் பிரச்சினை நட்புக்காக எதையும் செய்யும் பிரபாஸ் என கதை சொல்லி நம்மை குழப்பி அனுப்புகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் இந்திய சினிமாவுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லணும் படத்தில் மிக பெரிய நடிகர்கள் படலாம் அதற்க்கு காரணம் கதை களம் . அதற்கு ஏற்ப நட்சத்திர பட்டாளம் குறிப்பாக தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்று இருப்பது. கேமரா, கதைக்களம், காட்சி அமைப்பு, இசை எல்லாவற்றிலும் மிக பிரமாண்டம் ஒவ்வொரு காட்சியும் நம்மக்கு மிரட்சியை உண்டு பண்ணும் அளவுக்கு காட்சிகள் . படத்தின் பலம் பிரபாஸ் மிக பிரமாண்ட மான காட்சிகள் அதற்கு ஏற்ப காட்சியமைப்பு என இயக்குனர் கையாண்டு இருக்கிறார்.

பிரபாஸ்க்கு இந்த படம் பாகுபலிக்கு பின் மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியை கொடுக்கும் என்பதில் சிறிதும் அச்சமில்லை இந்த கதைக்கு பிரபாஸ் தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது அந்த அளவுக்கு ஒரு கதாபாத்திரம் இவருக்கு பொருந்தியுள்ளது . இவரை தவிர இந்த ரோலை யார் செய்து இருந்தாலும் அது கொல்லம் பட்டறையில் ஈ இருக்கும் போல இருக்கும்.

படத்தின் அடுத்த பலம் பிரித்திவ் ராஜ் அவர் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்துள்ளார். அவரின் பல நாள் கனவு ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வளம் வர வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது .

ஸ்ருதிஹாசன் கதைக்கு தேவையேயில்லை. ஃபிளாஷ் பேக் கேட்பதற்காக கதையில் இருக்கிறார். பிரித்விராஜ் மன்னார் பரம்பரையை சேர்ந்தவர். இடைவேளையின்போதுதான் வருகிறார். நல்லவனா வில்லனா என்று குழப்பம் ஏற்படுகிறது. ஒரு வேளை அடுத்த பாகத்தில் இதற்கான விடை தெரியலாம். இதிலும் அம்மா சென்ட்டிமென்ட் படத்தில் கொன்ஜம் பலவீனம் என்று தான் சொல்லணும் அம்மாவாக ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம் ஜான் விஜய் ஆகியோர் நடிப்பு நன்று. ரவி பாஸ்ரூர் இசை திரைக்கதைக்கு மிக பெரிய பலம். அன்பறிவு சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப் பெரிய பலம்.