பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நடித்த சால்மன் 3டி திரை விமர்சனம்
சால்மன் மீன் சாப்பிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை அந்த இளைஞனுக்கு. ஒரு நாள் அவனுடைய மனைவி பிறந்தநாள் பரிசாக அந்த மீனை சமைத்து கொடுக்கிறாள்.விஷம் கலந்த அந்த மீனை சாப்பிடாமல் நண்பனின் அறிவுறுத்தலில் தப்பித்து விடுகிறான். இப்படியான ஒரு நிலையில் அகால மரணமடைந்த கன்னி பெண்களின் ஆவியை தன் வயபடுத்திக் கொள்ளும் காலபைரவி பெண் மந்திரவாதி தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குகிறாள். கதாநாயகனின் நண்பன் மீது இந்த ஆவி புகுந்துவிடுகிறது. அதிலிருந்த மீள முடியாமல் தவிக்கிறான். இதை அறியும் நாயகன் விஷமீனை உட்கொள்ளாமல் தன்னை காப்பாற்றிய நண்பனை அந்த கால பைரவியிடமிருந்து மீட்டெடுத்து கால பைரவியையையும் அமானுஷ்ய சக்திகளையும் ஒழித்து கட்டுகிறான்.
விஜய் யேசுதாஸ்,ராஜீவ் கோவிந்த் ,பஷீர் பாஷி ஜபீர் முகமது,
மீனாட்சி ஜெய்ஷ்வால், ஜோதிகா டோட்டா .நேகா ஆகியோர் கனகச்சிதமாக நடித்துள்ளனர்.
மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்கள் உணர்ந்து அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஷலீல் கல்லூர் அற்புத இயக்கியிருக்கிறார்.
படத்தின் பின்னணி இசை திகில் ஊட்ட வைக்கிறது .ராகுல் மேனனின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமிக்கவைக்கியது. சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ரசிகர்களை கிரங்கடிக்கிறது.
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.