Tuesday, November 4
Shadow

சரண்டர் திரைவிமர்சனம்

சரண்டர் திரைவிமர்சனம்

 

“சரண்டர்” – தேர்தல், துப்பாக்கி, திருடப்பட்ட பணம்… சுவாரசியம் தீவிரம் பெறும் திரைக்கதை!

தேர்தல் நேரம். பணம் கைமாறும் சூழ்நிலை. அதே நேரத்தில் ஒரு காவல் நிலையத்தில் துப்பாக்கி மாயமாகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பின்னணி ஒன்றுதான் என்பதை வெளிக்கொணரும் முயற்சியாக அமைந்துள்ளது “சரண்டர்” திரைப்படம்.

தர்ஷன், ஒரு பயிற்சி பெற்று வரும் எஸ்.ஐ ஆக நடித்துள்ளார். அவருடைய ஸ்டேஷனில்தான் லால் பாதுகாப்பில் இருக்கும் நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி மாயமாகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, மன்சூர் தன் துப்பாக்கியை தற்காலிகமாக ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். இதே நேரத்தில், ஒரு ரவுடி மூலமாக தேர்தல் பணத்தை பகிர்ந்து கொள்ள அரசியல் வாதிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால் அந்தப் பணமும் காணாமல் போகிறது. இந்த இரட்டை மாயங்களுக்கும் உள்ள தொடர்பே கதையின் மையம்.

தர்ஷன் தனது நடிப்பில் நம்பிக்கையூட்டும் பரிமாணத்தை வெளிக்கொண்கிறார். நடிகர் லால், நேர்மையான போலீசாக தன் வழக்கமான நடிப்பால் சாதாரண காட்சிகளையும் சிறப்பாக்குகிறார். மன்சூர் அலிகான் மற்றும் பிற supporting கேரக்டர்களும் தங்களுக்குரிய இடத்தில் மிகச்சிறப்பாக இயங்கியுள்ளனர்.

இசை, தேவைப்படும் அளவில் மட்டுமே இருப்பது கூடுதல் புள்ளியாக அமைகிறது. ஒளிப்பதிவு குறைந்தபட்சம் சராசரிக்கு மேல் இருக்கும் வகையில் காட்சிகளை வாசலுக்கு கொண்டு வருகிறது. எனினும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது குறிப்பு.

படம் மெதுவாக ஆரம்பித்தாலும், 45 நிமிடங்களுக்குப் பின் திரைக்கதையில் வந்த திடீர் திருப்பங்கள், இரட்டை சம்பவங்களின் தொடர்ச்சியான காட்சிகள் மூலம் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. முதல் பாதியின் நேர்த்தி, இரண்டாம் பாதியிலும் தொடருகிறது. முனிஷ்காந்த் பாகங்களை சற்றே குறைத்திருக்கலாம் என்றாலும், கதையின் ஓட்டம் களைப்பில்லாமல் செல்லுகிறது.

நேர்த்தியான திரைக்கதை, சரியான நடிகர் தேர்வு, மற்றும் இசையில் இனிமையான சமநிலை ஆகியவற்றால், “சரண்டர்” ரசிகர்களிடையே சரணடைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.

மதிப்பீடு: 3.25 / 5