Sunday, May 19
Shadow

சினம் – திரைவிமர்சனம் (சினம் நல்ல குணம்) Rank 4/5

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சினம்’. இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார்.

சினம் ஒரு போலீஸ் கதையம்சம் கொண்ட படம் என்று சொல்ல முடியாது இது ஒரு அம்சமான குடும்பத்தை என்றும் சொல்லமுடியாது அப்பா என்ன என்று கேள்வி கேட்கிரிகளா இது ஒரு சமூக கதையம்சம் கொண்ட படம் என்றும் சொல்லலாம். அதோடு போலீஸ் கதையும் உண்டு அருமையான மனதை வருடும் குடும்பத்தையும் உண்டு.

போலீஸ் என்றால் நல்ல போலீஸ் உண்டு கேட்ட போலீஸ் உண்டும் இதுல நம்ம ஹீரோ நல்ல போலீஸ் அனாதை ஆசிரமத்தில் வளர்த்தவர் அவரின் கடின உழைப்பில் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்ட்டர் ஆகிறார். நேராமையான போலிஸ் அதிகாரி அருண் விஜக்கு நாயகியுடன் காதல் ஏற்படுகிறது இந்த காதல் காட்சிகளை இயக்குனர் அற்புதமாக படம்மக்கியுள்ளார்.இந்த காதல் கல்யாணத்தில் முடிகிறது. அழகான குடும்பம் அழகான ஒரு பெண் குழந்தை இப்படி அற்புதமான கதையில் ஒரு ட்விஸ்ட் நேர்மையான போலீஸ் என்பதால் தன் டிப்பார்மெண்டில் மேல் அதிகாரிகளின் எதிப்பு இருக்கத்தானே செய்யும்.

இந்த சூழ்நிலையில் அருண்விஜய் மனைவி ஒரு சிலரால் கொலை செய்யப்படுகிறாள். இதை அருண் விஜய் மேல் அதிகாரிகள் இவர் மேல் இருக்கும் கோவத்தை மனிதாபிமானம் இல்லாமல் இவருக்கு கள்ள காதல் அதுனால் கள்ள காதலுனுடன் யாரோ கொலை செய்து போட்டுவிடடார்கள் என்று கூறுகிறார் இதனால் அருண் விஜய் விஜய் கோபமடைந்து அந்த அதிகாரியை அடித்துவிடுகிறார். இதனால் இவரை சஸ்பென்ஸ் பண்ணுகிறார்கள் வேலையும் பொய் மனைவிக்கு அவப்பெயரும் ஏற்படுகிறது.மனைவி மேல் ஏற்படும் அவப்பெயரும் களங்கத்தையும் மீண்டும் வேலைக்கு திரும்பினாரா என்பது தான் மீதி கதை .


அருண் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக மின்னலாக தெறிக்கிறார் அதேபோல ஒரு தகப்பனாகவும் ஒரு காதலனாகவும் நடிப்பில் ஜொலிக்கிறார். இயக்குனரின் உணர்வை புரிந்து கூச்சல் இறைச்சல் இல்லாமல் மிகவும் அமைதியான எதார்த்தமான நடிப்பில் இயக்குனருக்கு பலம் சேர்ந்து உள்ளார். என்று சொன்னால் மிகையாகாது.

அறிமுகநாயகி பாலக் லால்வனி தன் முதல் படத்திலே தன் சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

படத்தின் அடுத்த பலம் இசையமைப்பாளர் ஷபீர் அருமையான பாடல்கள் கதைக்கு ஏற்ப பின்னணி இசை என்று இயக்குனருக்கு பலமாக இருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வளம் வருவார்.

இயக்குனர் . என். ஆர். குமாரவேலன் மிக நேர்த்தியான கதையம்சம் கொண்ட கதையுடன் ரசிகர்களை சந்தித்துள்ளார் இன்றைய சமுதாயாத்துக்கும் தேவையான ஒருகதையம்சம் கொண்ட படமாக அமைத்துள்ளார். முதல்பாதி கதை மிகவும் அற்புதமான காதல் கதையாகவும் அடுத்த பாதி மிகவும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியின் கதையோடு சமுதாயச்சிந்தனை கலந்த ஒரு கதையாக கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் சினம் மனதைவருடவும் சிந்திக்கவும் செய்யும் ஒரு படமாக அமைந்துள்ளது.