Sunday, May 28
Shadow

சொப்பன சுந்தரி” – திரை விமர்சனம்! (Rank 2.5/5)

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரின் நடிப்பில் புகழ்பெற்ற வசனமான சொப்பன சுந்தரியை யாரு வெச்சுருக்கா என்ற வசனத்தை படத்தின் தலைப்பாக வைத்து வந்துள்ள படம்தான் சொப்பன சுந்தரி‌. சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா, லட்சுமிபிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்படி இருக்கிறது இந்த சொப்பன சுந்தரி‌ என்று பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நோயாளி அப்பா, அம்மா தீபா, வாய் பேச முடியாத அக்கா லட்சுமி பிரியாவுடன் வாழ்ந்து வருகிறார். ஏழை குடும்பம். ஐஸ்வர்யா ராஜேஷ் நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நகை வாங்கியதற்காக பரிசுக் கூப்பனில் முதல் பரிசாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கார் கிடைக்கிறது. அந்த காரை வைத்து அக்காவின் திருமணத்தை நடத்த நினைக்கிறார். இந்த நிலையில் நான்தான் நகை வாங்கினேன் எனக்குத்தான் கார் வேண்டும் என்று அண்ணன் கருணாகரன் பிரச்சினை செய்கிறார். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. இறுதியில் நகை வாங்கியது யார்? சொப்பன சுந்தரி யாருக்கு கிடைத்தது? என்பதே இந்த சொப்பன சுந்தரி‌யின் கதை.

காரை யாருக்கு சொந்தம் என்பதை காமெடி படமாக கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் சார்லஸ். ஆனால் எங்கேயும் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை என்பதே உண்மை. முதல் பாதி ரொம்பவும் பொறுமையை சோதிக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே ஓரளவுக்கு படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். தனி ஆளாக படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். அம்மாவாக தீபா வழக்கமான நடிப்பால் கவர்கிறார். ஆனால் அவரது காட்சிகள் எல்லாமே டாக்டர் படத்தை ஞாபகப்படுத்துகிறார்.

போலீசாக சுனில், கருணாகரன், மைம் கோபி ஆகியோர் நடிப்பு ஓகே. வாய் பேச முடியாத வேடத்தில் லட்சுமி பிரியா நன்றாக நடித்துள்ளார். பாடல்கள் ஏமாற்றம். கிளைமாக்ஸ் காட்சி மகளிர் மட்டும் படத்தை போன்று இருக்கிறது. கதையாக பார்த்தால் தனது குடும்பத்துக்காக துணிந்து போராடும் பெண்ணின் கதை. இது நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை போன்றே உள்ளது. மொத்தத்தில் காமெடி குறைவு