
கோடை விடுமுறைக்கு ஏற்ற பிரமாண்ட திரைப்படமாக மே 9 ஆம் தேதி வெளியாகும் ‘கஜானா’!
மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிகளே. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’. மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியுள்ளது.
‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகளை உலகத்தரத்துடன் அமைக்க வேண்டும் என்பதற்காக படக்குழு அதிகமாக மெனக்கெட்டது. அதன் காரணமாகவே இப்படத்தின் வெளியீட்டுக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
மேலும், இதுவரை அச்சு வடிவிலும், சிற்ப வடிவிலும் நாம் பார்த்து வந்த யாளி விலங்கை முதல் முறையாக திரையில் தோன்ற செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் பணியை இப்படக்குழு மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மலேசியா மற்றும் லண்டனில் நடைபெற்ற இபப்டத்தின் VFX பணிகள் யாளி விலங்கை வடிவமைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, அந்த விலங்கை வியக்க வைக்கும் விதத்திலும், சிறுவர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாக்கியிருக்கிறார்களாம். இதுவரை டைனோசரை விரும்பி வந்த சிறுவர்கள் ‘கஜானா’ படத்திற்கு பிறகு யாளி விலங்கை நிச்சயம் கொண்டாட கொண்டாடுவார்கள். அதேபோல், படத்தில் இடம்பெற்றுள்ள சாகச காட்சிகளும், அதனை VFX மூலம் வடிவமைத்த விதமும் நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வியக்க வைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள், விலங்குகளுடன் உரையாடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் பேசி நடித்தது இதுவே முதல் முறையாகும். VFX பணிகளினால் இப்படம் வெளியாவது சற்று காலதாமதம் ஆனாலும், படத்தில் இடம்பெறும் VFX காட்சிகள் உலகத்தரத்தோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் இடம்பெறாத காட்சிகளாகவும் வந்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு பிரமாண்டமான மற்றும் வியக்கத்தக்க அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி என்கின்றனர் ‘கஜானா’ படக்குழு.
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார், இணை தயாரிப்பாளர் டிக்கிம் சன்ஞ்
மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.