Sunday, May 19
Shadow

டாணாக்காரன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் மற்றும் பலர் நடிப்பில், இயக்குநர் தமிழ் இயக்கிய படம் டாணாக்காரன். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். டாணாக்காரன் டிஸ்னிப் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்போது விமர்சனத்தைப் பார்க்கலாம்.

டாணாக்காரன் என்ற பெயர் மற்றும் ட்ரெய்லரை பார்க்கும் போதே இது காவல்துறை சம்மந்தப்பட்ட கதை என்பது தெரிந்து இருக்கும். விக்ரம் பிரபுவின் அப்பா லிவிங்ஸ்டன் காவல் துறையினரால் பாதிக்கப்படுகிறார். அதனால் தனது மகனை காவல் துறை அதிகாரியாக வெண்டும் என கூறிவிட்டு இறந்துவிடுகிறார்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றக் காவலர் பயிற்சிக்குச் செல்லும் போது அங்குப் பயிற்சி அதிகாரியாக வரும் லால், பெரும் தொல்லைகளை கொடுக்கிறார். அதை எல்லாம் மீறி தந்தையின் ஆசையை விக்ரம் பிரபு நிறைவேற்றினாரா இல்லையா என்பது மீதக்கதை.

விக்ரம் பிரபு தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். லால் வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாநாயகி அஞ்சலி நாயருக்கு பெரிதாக வேலையில்லை என்றால், கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

படத்தின் பிளஸ்: 

எம்.எஸ் பாஸ்கர் தனது அனுபவத்தை மீண்டும் நிரூபித்து சென்று இருக்கிறார். லிவிங்ஸ்டன், லிங்கேஷ், பவல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகள் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் எனவும் படத்தை அழகாக இயக்கியுள்ளார் தமிழ்.

படத்தின் மைன்ஸ்: 

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

மொத்தத்தில் டாணாக்காரன் ஒரு முறை பார்க்கலாம்.