Sunday, May 19
Shadow

தலைக்கூத்தல் – திரைவிமர்சனம். (Rank2.5/5)

YNot Studio சசி காந்த் தயாரிப்பில் சமுத்திரகனி, கதிர்,வசுந்தரா, மற்றும் பலர் நடிப்பில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவ்திருக்கும் படம் தலைக்கூத்தல்

மிகவும் ஏழ்மையான குடும்பம் இதில் குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நிலை சரியல்லாமல் இருக்கிறார் இவரால் குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்க பட்டுள்ள படம்.

சமுத்திரகனி கட்டிட மேஷ்த்திரி இவரின் மனைவி வசுந்தரா இவர்களுக்கு ஒரு பெண் சமுத்திரகனி அப்பா கட்டிட வேலையின் போது மேலே இருந்து கீழே விழ்ந்து விடுகிறார். இதனால் இவர் படுத்த படுக்கையாகிரார். அவரை பார்த்து கொள்ள கட்டிட வேலைக்கு பகலில் தான் போக முடியும் ஆகவே அந்த வேலையை விட்டு இரவு நேர காவலர் செக்கிரிட்டி வேலைக்கு போகிறார் இதில் வருமானம் குறைவு இதனால் கணவன் மனைவிக்கு பிரச்சனை இதனால் குடும்பத்தில் பல குழப்பங்கள் மனைவி தீப்பெட்டி கம்பனியில் வேலைக்கு செல்கிறார் இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிளவு மனைவி அவரை கருணை கொலை செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். வசுந்தரா அப்பா அண்ணன் அப்பா அனைவரும் அவரை கருணை கொலை செய்துவிட்டு பிழைக்குற வேலையை பாருங்க என்று சொல்ல ஆனால் இவர் எனக்கு என் அய்யா தான் முக்கியம் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி சம்மதிக்கிறார். இதன் பின் என்ன ஆகிறது என்பது தான் மீதிக்கதை.

சமுத்திரகனி படத்தின் உயிர் மீன் குஞ்சுக்கு நீச்சல் அடிக்க சொல்லியா கொடுக்கணும் எப்போதும் போல நடிப்பில் நம்மை பிரமிக்க வைக்கிறார். கொஞ்சமும் மனம் நோகாமல் தன் அப்பாவை பார்த்து கொள்ளும் கணி நடிப்பில் நம் புருவத்தை உயர்த்த வைக்கிறார். இவரை நடிப்பை பார்க்கும் போது இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என்று தோன்ற வைக்கிறார்.

மனைவியாக வரும் வசுந்தரா சமுத்திரக்கனியுடன் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கிறார். அவரின் மகளாக வரும் பெண் அவரும் நடிப்பில் பிரமிக்க வைக்கிறார்.

படதின் கதை களம் மிக சிறப்பான கதை களமாக இருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது இதனால் கொஞ்சம் கூட விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது அதே போல படத்தின் நீளமும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

இருந்தும் அனைவரும் கண்டு ரசிக்கும் படி படத்தை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளார். இன்றைய சமுதாயத்தில் இன்றும் நடக்கும் உண்மை சம்பத்தை கையாண்டும் இருக்கும் இயக்குனரை பாராட்டவேண்டும் இனி வரும் சமுதாயம் இப்படி ஒரு அவலத்தை செய்யாமல் இருக்க ஒரு பாடமாக கொடுத்துள்ளார்.

சமுத்திரகனி சிறு வயது அப்பாவாக நடிக்கும் கதிர் தன் கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்து இருக்கிறார் அதே போல அவருக்கு ஜோடியாக நடிக்கும் வங்க நடிகை நடிப்பில் நம்மை கவருகிரார்.

மொத்தத்தில் தலைக்கூத்தல் பாசத்தின் பறைசார்றல்