Wednesday, May 6
Shadow

சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் வெளியான “லூ” படத்தின் முதல் போஸ்டர்!

சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் வெளியான “லூ” படத்தின் முதல் போஸ்டர்!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என மூன்று துறைகளிலும் தனித்த பெயர் பெற்ற தியாகராஜன் அவர்கள், கதாநாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளை முன்னிட்டு “லூ” திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு சிறிய மலை கிராம மக்களின் வலி, வேதனை, துன்பம் நிறைந்த வாழ்க்கைச் சரித்திரத்தை, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்திருக்கும் படம் தான் “லூ”.

ஆவணப்படங்கள் மூலம் சமூக பிரச்சனைகளை முன்வைத்து வந்த கோகுல்ராஜ் மணிமாறன், இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை கவனித்து உள்ளார். பல்வேறு நிஜ சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதால், படம் ரசிகர்களிடம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் பிரகத் முனியசாமி, ஹரா, கிறிஸ்டினா கதிர்வேலன் உள்ளிட்ட பல படங்களில் அனுபவம் பெற்றவர். அவர் தனது கேமரா மூலமாக கொடைக்கானல் மலையின் இயற்கை அழகையும், அங்குள்ள மக்களின் வேதனையையும் மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரபாகர் நடித்துள்ள இந்த படத்தில் கிலைட்டன், அலெக்ஸ்பாண்டியன், வைணவஸ்ரீ, ஜனனி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

“லூ” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு வருவதால், குழுவினரிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

போஸ்டர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் தியாகராஜன், படக்குழுவினரான இயக்குனர் கோகுல்ராஜ் மணிமாறன், ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமி, எடிட்டர் லோகேஷ், ஹீரோ சந்தோஷ் பிரபாகர், தயாரிப்பு மேற்பார்வையாளர் சதீஷ்குமார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டினார்.

விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க உள்ள “லூ” திரைப்படம், ஒரு வித்தியாசமான சமூகநிலை படமாக அமைந்துள்ளது.


PRO: ஸ்டில்ஸ் சரவணன்