Thursday, September 23
Shadow

திட்டம் இரண்டு – திரைவிமர்சனம் (விறுவிறுப்பு) Rank 3.5/5

டுப்லிருந்து க்குயுப்க்கு வந்து இருக்கும் ஆசாம் மச்சிக்கு வாழ்த்துகள் யு டுப்யில் மிக சிறந்த குறும்படங்களை கொடுத்த ஆசாம் மச்சி குழுவினரின் முதல் முயற்சி வாழ்த்துகளுடன் ஆரம்பிப்போம் பல தரமான குறும்படங்களை தந்த இவர்கள் வெள்ளித்திரையில் முதல் முறையாக தடம் பதிக்கிறார்கள் நிச்சயம் ஒரு தரமான கதையும் படமும் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தான் பார்க்க ஆரம்பித்தோம். அந்த ஆர்வத்தை கொஞ்சமும் குறைக்காமல் கொடுத்துள்ளனர் .

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் திட்டம் இரண்டு. முற்றிலும் மிக வித்தியாசமான கதை களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு என்றும் சொல்லலாம்

காவல் ஆய்வாளர் ஆதிரா. தன்னுடன் பேருந்தில் ஒன்றாக சென்னைக்கு பயணிக்கும் அர்ஷுன் உடன் காதல் உருவாகிறது. பின்னர் ஒருவருக்கொருவர் சென்னையில் பார்த்துக்கொள்கின்றனர். பழக்கம் தொடர்கிறது. இதனிடையே தனது சிறுவயது தோழி தீபசூர்யா மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் ஆதிரா அதில் வெற்றிபெற்றாரா. இவர்களது காதல் என்ன ஆனது என்பதே திட்டம் இரண்டு.

ஒரு கொலை அதற்கு யார் காரணம் என்ற வழக்கமான த்ரில்லர் படமாக தொடங்கி விறுவிறுப்பாக கதை நகர்ந்து யாருமே எதிர்பார்க்காத திருப்பத்துடன் கதை முடிவடைகிறது.

ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ். காவல் ஆய்வாளாக நச்சென்று பதிகிறார். தனது தோழிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவிப்பதாகட்டும் அர்ஜுனுடன் காதலில் உருகுவதாகட்டும் சிறப்பாக செய்துள்ளார். ஒருசில கதாபாத்திரங்களே படத்தில் இருந்தாலும் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர். அர்ஜுனாக வரும் சுபாஷ் செல்வம், பரணியாக வரும் பாவல் நவகீதன், கிஷோராக வரும் கோகுல் ஆனந்த், தீப சூர்யாவாக வரும் அனன்யா எல்லோருகே கதைக்கு வலு சேர்த்துள்ளனர். ஒரு மர்டர் மிஸ்ட்ரியாக தொடங்கி க்ளைமாக்ஸில் உண்மை வெளியவரும் காட்சியில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

கோகுல் பிளாயின் ஒளிப்பதிவு சிறப்பு. சதீஷ் ரகுநாதனின் இசை த்ரில்லர் படத்திற்கு தேவையானதை வழங்கியுள்ளது. பாடல்கள் ஓகே.

படத்தின் மைனஸ் இரண்டாம் பாகம் திரைகதை கொஞ்சமும் கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் திட்டம் இரண்டு ரசிக்கலாம்

CLOSE
CLOSE