Sunday, May 19
Shadow

தூக்குதுரை – திரைவிமர்சனம் Rank 2.5/5

 

டெனீஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்றாயன், மாரிமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த தூக்குதுரை.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி வர்மா. இசையமைத்திருக்கிறார் கே எஸ் மனோஜ்.

2000ஆம் வருடத்தில் கதை பயணப்படுகிறது. கைலாசம் என்ற கிராமத்தில் மிகப்பெரும் பண்ணையாராக வாழ்ந்து வருகிறார் மாரிமுத்து. இவரது மகள் தான் இனியா. இனியாவிற்கும் யோகிபாபுவிற்கும் காதல்.

காதலை மாரிமுத்து ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதற்காக, இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிடுகிறார்கள். இந்த சமயத்தில், கிராமத்தினர் அவர்களை பிடித்து விடுகிறார். யோகிபாபுவை கொன்று கிணற்றுக்குள் வீசி விடுகிறது மாரிமுத்து கும்பல்.

அதே சமயம், மாரிமுத்துவின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த மன்னர் காலத்து கிரீடம் ஒன்றும் அதே கிணற்றுக்குள் சிக்கி விடுகிறது.

தொடர்ந்து அந்த கிராம மக்களை ஆவியாக வந்து டார்ச்சர் செய்து வருகிறார் யோகிபாபு. வருடங்கள் உருண்டோட, அந்த கிணற்றுக்குள் இருக்கும் கிரீடத்தை களவாட நினைக்கிறார்கள் மகேஷ் மற்றும் பால சரவணன்.

அதற்காக அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள். யோகிபாபுவின் ஆவியை தாண்டி அந்த கிரீடத்தை இருவரும் கைப்பற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

மகேஷ், பாலசரவணன் மற்றும் செண்ட்றாயன் மூவரும் நண்பர்களாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு காமெடிக்கான இடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

யோகிபாபுவிற்கான இடமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. காமெடி கதைக்களம் என்றானபோது அதை இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான எந்த முயற்சியும் தூக்குதுரை படத்தில் எடுக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

இசை மற்றும் ஒளிப்பதிவு நமக்கு சற்று ஆறுதல் தான்… மொட்டை ராஜேந்திரன் ஆங்காங்கே ரசிக்க வைத்திருக்கிறார்.

தூக்குதுரை – காமெடி இல்லை துரை…