Monday, May 20
Shadow

துரிதம் – திரைவிமர்சனம் ரேங்க் 2.5/5

துரிதம் ஒரு திரில்லர் கதை களத்தை மையமாக வைத்து கதை களமாக அமைத்துள்ளார் இயக்குனர் அதுவும் ஒரு பயணத்தில் ஏற்படும் அனுபததை மையமாக வைத்து அமைத்துள்ளார். சரி படத்திலn நடிகர்களை பார்ப்போம்.

சண்டியர்’ ஜெகன் – மாரிமுத்து
ஈடன் – வானதி
ஏ.வெங்கடேஷ் – வானதி தந்தை
பாலசரவணன் – கரிகாலன்
பூ ராமு – மாஸ்டர்
ராமச்சந்திரன் (ராம்ஸ்) – வில்லன்
வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா – வானதி பிரண்ட்ஸ்

 

இந்த படத்தின் இயக்குனர் சீனிவாசன் இசை ; நரேஷ்
ஒளிப்பதிவு ; வாசன் & அன்பு டென்னிஸ் இந்த படத்தை தயாரித்தவர் திருவருள் ஜெகநாதன்

கதையின் நாயகி வானதி மதுரையிலிருந்து வந்து சென்னையில் தங்கி IT யில் வேலைசெய்துகொண்டிருக்கிறார், இவரின் அப்பா மிகவும் கண்டிப்பானவர் வானதி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை 1 மணிக்கு ஒரு தடவை விசாரித்து கொண்டிருப்பார் , வானதி மீண்டும் மதுரைக்கே போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கதையின் நாயகன் மாரி நாயகியை வேளைக்கு கொண்டு போய் விடும் கார் டிரைவராக இருக்கிறார் , அவருக்கு வானதி மேல் ஒருதலை காதலும் இருக்கிறது, அப்படி வானதி மதுரைக்கு செல்ல வேண்டிய ரயிலை விட்டு விடுகிறார் , பிறகு மாரியின் உதவியுடன் மதுரைக்கு செல்ல திட்டமிடும் வானதி , செல்லும் வழியில் ஒரு சிக்கலில் சிக்கி கொள்கிறார். கடைசியில் வானதி அந்த சிக்கலில் இருந்து தப்பித்து தனது அப்பாவிடம் மாட்டாமல் வீட்டிற்கு சென்றாரா ? இல்லையா ? என்பதும் நாயகன் மாரி தனது காதலை வானதியிடம் வெளிப்படுத்தினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…இந்த கதையினை இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார் இவருக்கு இது இரண்டாவது படம் ஏற்கனவே சண்டியர் என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு நல்ல கதையை தவறான திரைகதை மூலம் படத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.நல்ல நட்சத்திரம் இருந்தும் படம் நமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.