Monday, February 17
Shadow

உற்றான் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)


கல்லூரி காதல் படம் தான் உற்றான் அறிமுக இயக்குனர் ராஜா கஜினி இயக்கி தயாரித்து இருக்கும் படம் தான் இந்த உற்றான்

இந்த படத்தில் அறிமுக நாயகன் ரோஷன் உதயகுமார், நாயகியாக ஹீரோஷினி பிரியங்கா பத்திரிக்கையாளர் ரவி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் ரகுநந்தன் இசையில் ஹோலிக் பிரபு ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படம்
படத்தின் கரு மோட்டார் பைக்கில் செல்லும் போது டயரில் ஆணி குத்தி நிற்கும் போது பார்க்கும் பெண்ணை காதலிக்கும் கதை தான் இந்தபடம் இந்த காதல் நிறைவேறுச்சா இதில் இவர் சந்திக்கும் இடையூறுகள் பிரச்னைகளை மையமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்

அறிமுக நாயகன் ரோஷன் உதயகுமார் ஒரு ஹீரோக்கான எல்லா தகுதியுடன் களம் இறங்கியுள்ளார் என்று சொல்லலாம் நடிப்பு டான்ஸ் சண்டைகாட்சிகள் இப்படி அனைத்திலும் தன் திறமையை மிகவும் அற்புதமாக வெளிபடுத்தியுள்ளார். நிச்சயம் கோடம்பாக்கம் இவரை வரவேற்கும்

அறிமுக நாயகி ஹீரோஷினி கொடுத்த வேலையை மிகவும் புரிந்து அழகாக செய்துள்ளார் இயக்குனர் சொன்னதை அப்படி செய்துள்ளார்.ஒரு படத்துக்கு நாயகி எந்த அளவுக்கு முக்கியமோ அதுவும் காதல் படத்துக்கு நாயகி தான் மிக முக்கியம் அதை திறம் படசெய்துள்ளர்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரியங்கா படத்துக்கு மிக பெரிய பலமாக உள்ளார் அவரின் காதலனாக வரும் ரவிசங்கர் இவர் ஒரு பத்திரிக்கையாளர் முதல் முறையாக நடிப்பில் களம் இறங்கியுள்ளார் .தாதாவாக வரும் ரவி ஷங்கர் கதாபாத்திரத்தை புரிந்து அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது. யாவரும் தமிழ் சினிமாவில் வில்லனாக வளம் வருவது நிச்சயம் வாழ்த்துகள் ரவி ஷங்கர்.
அறிமுக இயக்குனர் ராஜா கஜினி தன் முதல் படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார் .விதியாசம்ம்ன கதை கொஞ்சம் திரைகதையுளும் நடிகர்களின் தேர்விலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல படமாக அமைந்து இருக்கும்.