Saturday, February 4
Shadow

V 3 – திரைவிமர்சனம் (படம் இல்லை பாடம் ). Rank 3.5/5

 

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் தான் நல்ல கருத்தை சொல்லும் படங்கள்  வரும் அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் ஒரு படம் தான் இயக்குனர் அமுதவானன் இயக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் V3 இந்த படத்தில் வரலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக நடிகை பாவனா மலையாள புகழ் எஸ்தர் அணில் ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் V3

படத்தின் கரு பாலியல் பலாத்காரத்திற்கு தீர்வு சொல்லி இருக்கும் படம் தான் இந்த படம் படத்தின் ஆரம்பத்திலே இந்தியாவில் நடந்த முக்கிய பாலில் பலாத்காரத்தை பற்றிய ஒரு அலசல் பற்றி சொல்லி தான் இந்த படம் ஆரம்பிக்கிறது .பாலியல் பலாத்காரத்திற்கு தண்டனை மட்டுமே தீர்வு ஆகாது இந்தியாவில் பாலியல் பலாத்த்காரதிர்க்கு எத்தனையோ வித கடுமையான தண்டனைகளை இருந்தும் இங்கு மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனை அரங்கேற்றம் நடக்கிறது அரசும் தண்டனை கொடுத்து கொண்டே இருக்கிறது இருந்தும் இதற்கு முற்று புள்ளி வைக்க முடியவில்லை. இதற்கான தீர்வு என்ன என்று சொல்லி இருக்கும் படம் தான் V3

 

கோவையில் ஆடுகளம் நரேன்க்கு இரண்டு மகள்கள் அதில் மூத்த மகள் பரீட்சை காரணமாக வெளியூர் சென்று வீடு திரும்பும் போது ஐந்து பேர்களால் கற்பழிக்க படுகிறாள். இதற்கு அரசாங்கம் தன் ஆரசு துரித நடவடிக்கை எடுக்கிறது என்று காண்பிக்க ஐந்து அப்பாவி வாலிபர்களை என்கவுண்டர் பண்ணி சாகடிக்கிரார்கள். இதனால் இந்த வாலிபர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்காக வரலக்ஷ்மியை இந்த கேஸ் விசாரிக்க ஸ்பெஷல் ஆபிசராக நியமிக்க இந்த கேஸ் உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கிறார். இதன் பின் என்ன என்பது தான் கதை உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா கற்பழிக்க பட்ட பெண் நிலைப்பாடு என்ன என்பதை கொஞ்சம் கொலருபடி திரைகதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

 

படத்தின் பலம் வரலக்ஷ்மி புதுமுகம் பாவனா மற்றும் ஆடுகளம் நரேன் இந்த மூவரின் நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது குறிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிக தைரியம் வேண்டும் அதை மிக சிறப்பாக செய்து இருக்கிறார் புதுமுக பாவனா இவருக்கு சலைத்தவன் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆடுகளம் நரேன் மற்றும் வரலக்ஷ்மி.

மொத்தத்தில் V3 அனைவரும் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய ஒரு படம் அதே போல பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு தீர்வும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்