Monday, May 20
Shadow

வட்டாரா வழக்கு – திரைவிமர்சனம் (கிராம மக்களின் வாழ்வியல்) Rank 3.5/5

 

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, தொட்டிச்சி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் வட்டார வழக்கு

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு பங்களாளி குடும்பங்களிடையே நடக்கும் மோதலும், அதனுடையே நடக்கும் ஒரு காதலும் தான் படத்தின் கதை.

இறுதியில், பங்காளி வீட்டு கதை என்னவானது.? ஹீரோ ஹீரோயின்களின் காதல் என்னவானது என்பதே க்ளைமாக்ஸ்.

அறிமுக இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்., இவரும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் அங்கு நடக்கும் சூழல், காதல், பங்காளிகளின் மோதல், காமெடி என அனைத்தையும் படத்திற்குள் கொண்டுவந்து விட்டார்.

1990 களில் நடக்கும் கதையாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். கதை செல்லும் போக்கில், நாமும் அந்த கிராமத்தில் ஒருவராக பயணப்பட்டு விடுவோம். அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு கலை நயத்தோடு படத்தை இயக்கியிருக்கிறார்.

1990களில் இளையராஜாவை கடந்து எந்த படமும் இயங்காது என்பதால், அவருடைய பல பாடல்கள் படத்தின் ஓட்டத்திற்கு பின்னால் வந்து செல்வது படத்திற்கு கூடுதல் பலம்.

தை பிறந்தால் இன்று பாடல் முனு முனுக்க வைத்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் தான்.

செங்கை கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். படத்தின் தன்மை அறிந்து கதையின் நாயகனாக வளம் வந்து இருக்கிறார் நிசந்தோஷ் நம்பிராஜன்

மாமன்னன் படத்திற்குப் பிறகு நாயகி ரவினா ரவிக்கு பெயர் சொல்லும் படமாக இது நிச்சயம் இருக்கும். ரவீனா ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதைவிட மிக சிறந்த நடிகை என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் தன் நடிப்பது கொடுத்து இருக்கிறார். இன்றைய நடிகைகளில் தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்து வருகிறார்.

வில்லனாக விஜய் சத்யா, இதுவரை அவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நிச்சயம் இதில் பார்க்கலாம். கிராமத்தில் சண்டை என்றால் இப்படி தான் இருக்கும் என்பதை கண்முன்னே கொண்டு வந்தி நிறுத்தியிருக்கிறார்.

தொட்டிச்சி கதாபாத்திரமாக மாறி, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம்.

இப்படியான படங்கள் தமிழ் சினிமாவிற்கு அவ்வப்போது கிடைப்பது மகிழ்ச்சி தான்.

1990 காலகட்டத்திற்குச் சென்று கிராமத்தை எட்டிப் பார்க்க வேண்டுமென்றால் நிச்சயம் இப்படத்திற்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்.

வட்டார வழக்கு – வாழ்வியல்..