
விடாமுயற்சி திரை விமர்சனம்
ஆங்கிலத்தில் பிரேக் டவுன் என்று வெளியாகி திரைப்படத்தின் தழுவல் தான் இந்த விடாமுயற்சி. இந்த தழுவல் படம் நாம் ரசிகர்கள் நெஞ்சில் தழுவி இருக்கிறதா என்று முதலில் பார்ப்போம்.
பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் கதையை எடுத்துக் கொண்டாலும் அந்தப் படத்தை அப்படியே காப்பி செய்யாமல் தமிழுக்கு ஏற்றது போல் மிக அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆங்கில படத்திற்கும் இந்த விடாமுயற்சி தமிழ் படத்திற்கும் முற்றிலும் திரைக்கதையில் வேறு படுத்தி உள்ளார் இயக்குனர். பல இடங்களில் படத்தின் ட்விஸ்ட் நம்மளை பிரமிக்க வைக்கிறது.
லைக்கா தயாரிப்பில் அஜித் குமார் திரிஷா அர்ஜுன் ரெஜினா கசன்றா ஆரவ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விடாமுயற்சி
சரி கதைக்குள் போகலாம்:
அஜித் திரிஷா கணவன் மனைவிகள் ஆனால் இவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகம் அஜித்தை விவாகரத்து செய்யத் துடிக்கும் திரிஷா வை விட்டுக் கொடுக்க மனம் வராத அஜித் இப்படி இருக்கும் சமயத்தில் த்ரிஷவின் அம்மா வீட்டிற்கு செல்லும்போது த்ரிஷா கடத்தப்படுகிறார் யார் கடத்தினார்கள் எப்படி கடத்தினார்கள் எதற்கு கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை
விடாமுயற்சியின் கதை ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதை இல்லை ஆனால் இந்த கதையை அஜித் தேர்ந்தெடுத்ததற்காகவே அவரை மிகப் பெரிய அளவில் பாராட்ட வேண்டும். இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.அஜித் முற்றிலும் ஒரு வித்தியாசமான அஜித்தை நாம் இந்த படத்தில் பார்க்கலாம் அற்புதமான ஒரு நடிப்பின் மூலம் நம்மை நெகிழ வைக்கிறார் குறிப்பாக மனைவியைப் பிரிந்து தேடும் சமயத்தில் அவரின் தவிர்ப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அஜித் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா எப்பவும் போல தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் திரிஷாவை கடத்தி இருக்கும்போது ரெஜினா கசண்டா மிரட்டும் சமயத்தில் தன் கணவனின் அன்புக்காக ஏங்கும் இடத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரிஷாவுக்கும் நிச்சயமாக இது ஒரு சவாலான கதாபாத்திரம் தான் அது மிக அருமையாக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
படத்தின் வில்லனாக அர்ஜுன் அவரின் காதலியாக ரெஜினா அவர்களின் கூட்டணியில் ஆரவ் இந்த மூவரும் சேர்ந்துதான் திரிஷா வை கடத்துகிறார்கள். இந்த மூவரின் கூட்டணி மிக அற்புதமான கூட்டணி என்று சொல்லலாம் அர்ஜுன் ஏற்கனவே மங்காத்தா மூலம் அஜித்துடன் நடித்திருக்கிறார் இதில் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவருக்கு ஜோடியாக வரும் ரெஜினா மிக அற்புதமான ஒரு வில்லியாக இந்த படத்தில் வலம் வருகிறார். அர்ஜுன் ரெஜினாவின் நண்பராக வரும் நாயகன் என்ற அந்தஸ்தை விட்டு வில்லன் என்ற அந்தஸ்துக்கு இறங்கி வந்தாலும் தன் நடிப்பை மிக அற்புதமாக நேர்த்தியாக செய்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வில்லன் இடத்தை பிடிப்பார்.
இயக்குனர் மகிழ் திருமேனி அற்புதமான திரைக்கதை மூலம் நேர்த்தியான அனைவரும் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் மேலும் ஒரு பலம் அனிருத் இசை பின்னனி இசையில் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார் அனிருத் அதேபோல் பாடல்களும் மிக அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் ஓம் பிரசாத் அற்புதமான ஒளிப்பதிவு மூலம் இது தமிழ் படமா இல்ல ஒரு ஆங்கில படமா என்ற அளவிற்கு ஒரு தரமான ஒரு படத்தை தமிழ் சினிமாக்கு கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் விடாமுயற்சி நல்ல முயற்சி