Thursday, June 1
Shadow

விடுதலை – திரைவிமர்சனம் (இந்திய சினிமாவின் பொக்கிஷம்) Rank 4.5/5

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த படம் என்று பார்த்தால் அது விடுதலை இந்த நூற்றாண்டின் மிக சிறந்த இயக்குனர் வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் இடம் பிடிப்பார் இன்றைய இயக்குனர்கள் கதை காலமும் சரி திரைகதை அமைக்கவும்  பயிற்சி எடுக்க வேண்டும் . அதே போல கதைக்கு கதாபாத்திரம் தான் முக்கியம் எந்த கதைக்கு யார் வேண்டும் எந்த கதாபாத்திரத்திற்கு யார் வேண்டும் என்று மிக சாமர்த்தியமாக இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்.

ஒரு சாதாரண கதையை எடுத்து கொண்டு அதற்கு எப்படி திரைக்கதை அமைக்கவேண்டும் என்று உணர்ந்து உணர்ச்சி பூர்வமான கதையையும் திரைக்கதையும் கொடுத்து இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன்.
புரட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் ஏற்படும் போராட்ட கதை களம் நாம் நிறைய பார்த்து இருக்கோம் அதை தான் நாம் விடுதலை படத்திலும் பார்க்கிறோம் ஆனால் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் இவ்வளவு வித்தியாசம் இவ்வளவு ஒரு உணர்வு பூர்வமாக காட்சிகள் அமைக்க பட்டுயுள்ளது படத்தின் பலம் வெற்றிமாறன் திரைக்கதை படத்தின் பலம் வெற்றிமாறனின் நட்சத்திரங்கள் இப்படி படம் முழுக்க வெற்றிமாறன் தெரிகிறார்.

படத்தின் அடுத்த பலம் கதை நாயகன் சூரி இவர் மிக சிறந்த நடிகன் என்று நிரூபித்து உள்ளார் நூறு கோடி சம்பளம் நட்சத்திர அடையாளத்துக்கு அலையும் நடிகர்கள் இவரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் சினிமா மிக நீண்ட காலத்திற்கு பிறகு கண்டு எடுத்துள்ள பட்டைதீட்டியை வைரம் தான் இந்த சூரி நகைச்சுவை மட்டும் இல்லை தான் சிறந்த நடிகரும் என்று நிரூபித்து இருக்கும் படம் தான் விடுதலை இனி இவரை கதையின் நாயகன் என்றே அழைப்பார்கள்.

படத்தின் அடுத்த பலம் பாவானி ஶ்ரீ சின்ன பொண்ணு ஆனாலும் எத்தனை நவரசம் இந்த பெண்ணின் நடிப்பில் தமிழுக்கு கிடைத்த மற்றும் ஒரு மகாநடிகை என்று தான் சொல்லணும் தன் பாட்டி இறந்து கிடக்கும் போது இவரின் கதறல் அரங்கை உருக வைக்கிறது அதே நேரத்தில் சூரியுடன் காதல் காட்சியில் அழகு தெரிகிறது
இந்த படத்தின் அடுத்த பலம் அய்யோ இந்த படத்தில் எல்லாமே பலம் தான் உண்மையில் வெற்றிமாறனின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இருப்பது இளையராஜா பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி நம்மை என்பதுகளுக்கு கொண்டு செல்கிறார். குறிப்பாக உன்னோடு இந்த பாடல் அய்யோ மெய்சிலிர்க்க வைக்கிறார். இசைஞானி இளையராஜா

இயக்குனர் கௌதம் மேனன் டி எஸ் பி இந்த படத்தில் வில்லன் கலந்த ஹீரோதனம் நம்மை ரசிக்க வைக்கிறார். கதைக்கு தேவையான நடிப்பை அழகாக உணர்ந்து நடித்து இருக்கிறார்.

படத்தின் மேலும் என் முக்கியமான ஒரு கதாபாத்திரம் வில்லத்தனமான ஒரு பாத்திரம் சேத்தன் காட்சிக்கு காட்சி தன் நடிப்பால் கதைக்கு பலம் சேர்த்து உள்ளார் நடிகர் சேத்தன்

படத்தின் எல்லாத்தை விட மிக முக்கிய பாத்திரம் விஜய் சேதுபதி இவரை பற்றி நாம் என்ன சொல்லணும் கதையின் ஆணி வேர் குறைந்த காட்சிகள் ரசிகர்களை சும்மா அதிர வைக்கும் காட்சிகளும் கிளைமாக்ஸ் வரும் விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தின் எதிரொலி

படத்தில் பங்குபெற்ற அனைவருமே மிக சிறந்த உழைப்பை கொடுத்து உள்ளனர். என்று சொன்னால் மிகயாகாது

தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்பில் ஒன்று இதை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் எல்றாட் குமார் அவர்களுக்கு ஒரு சல்யூட்