Monday, May 20
Shadow

விமானம் – திரைவிமர்சனம். Rank 3.5/5

 

சமுத்திரக்கனி நடித்துள்ள விமானம் திரை விமர்சனம்


சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் விமானம். தெலுங்கு படமான இது தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. மகனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் ஏழை தந்தையின் கதைதான் விமானம். சமுத்திரக்கனி ஏழைகள் நிறைந்திருக்கும் குடிசைப் பகுதியில் அம்மா இல்லாத தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள மாநகராட்சி கழிவறையை நிர்வகித்து வருகிறார். நன்றாக படிக்கும் அவரது மகனுக்கு ஒருதடவையாவது விமானத்தில் சென்றுவிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் ஏழை தந்தையால் அது எப்படி முடியும். அதுமட்டுமின்றி மகனுக்கு திடீரென ரத்தப் புற்று நோய் வந்துவிடுவதால் சில நாட்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகின்றனர். விமானத்தில் செல்ல பத்தாயிரம் தேவைப்படுகிறது. இறுதியில் மகனை விமானத்தில் அழைத்து சென்றாரா என்பதே கதை.

இக்கதையை கேட்டவுடனே இதன் திரைக்கதை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரிந்துஇருக்கும். நினைத்தபடியே தான் படமும் இருக்கிறது. சமுத்திரக்கனி மாற்றுத் திறனாளி அப்பாவாக வழக்கம் போல் தனது நடிப்பை கொடுத்துள்ளார். சோகம் நிறைந்த முகத்துடன் மகனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இடங்களில் கண்கலங்க வைக்கிறார். மகனாக நடித்துள்ள துருவனின் நடிப்பு அருமை. ஆனால் சிறுவர்களுக்கான படத்தில் விலைமாது கதாபாத்திரம் வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது இயக்குனர்
சிவ பிரசாத் யனலா.

சிறப்பு தோற்றத்தில் மீரா ஜாஸ்மின். இதுபோன்ற கதை சமீபத்தில் தமிழில் கூட ராஜா மகள் என்ற படம் வந்திருந்தது. அதில் வீடு இதில் விமானம் அவ்வளவு தான். இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் ஓடுவது சந்தேகமே.