தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு அதாவது அருந்ததி படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கும் மிகச் சிறந்த படம் என்று விருபாக்ஷா சொல்லலாம்
விருபாக்ஷா என்றால் சிவனின் மறு பெயர்
விருபாக்ஷா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் கார்த்திக் தண்டு தன் முதல் படத்தில் தான் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
மனிதனால் முடியாது மாந்தீரகத்தால் முடியும் என்ற கதையை கருவை எடுத்து சுகுமாரின் வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை ரசிகர்களை ரசிக்கும்படி இந்த படத்தை கொடுத்துள்ளார் தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய இரண்டு வாரங்களில் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது என்று சொன்னால் மிக ஆகாது
சரி இப்போது இந்த படத்தின் கதையை பார்ப்போம் ஒரு கிராமத்தில் தன் மனைவி உடல்நிலை சரியில்லை என்பதால் பல வைத்தியங்கள் பார்த்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று மாந்திரீகம் மூலம் தன் மனைவி குணப்படுத்த முயற்சிக்கிறார் ஒருவர் இதை இந்த ஊர் மக்கள் தவறாக எண்ணுகிறார்கள் தவறாக எண்ணி அவரையும் அவர் மனைவி மனைவியையும் தீயில் இட்டு கொளுத்தி விடுகிறார்கள் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மனைவி மகளும் உள்ளனர் இந்த மகனும் மகளும் சேர்ந்து இந்த கிராம மக்களை எப்படி பழிவாங்குகிறார்கள்
என்பது தான் இநபடத்தின் கதை
இயக்குனர் கார்த்திக் தண்டு தன் முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கதை களத்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தான் மிக சிறந்த இயக்குனர் என்றும் என்பதையும் இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார் என்றும் சொல்லலாம் படத்திற்கு எந்த அளவுக்கு கதை முக்கியமோ அதே அளவுக்கு இந்த படத்தின் திரைக்கதை மிக மிக முக்கியம் ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக அமைத்துள்ளார் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது அதே போல் சில காட்சிகளில் நம்மை பயமுறுத்தவும் செய்ய இருக்கிறது படத்தில் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியும் நம்மை பிரமிக்க வைக்கிறது அதே போல மிக சுவாரசியமாகவும் உள்ளது
படத்தின் மிக முக்கிய பங்கு என்று சொன்னால் சம்யுக்தா மேனன் இந்த படத்தின் நாயகி கதையை முழுக்க முழுக்க தாங்கி பிடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தன் அற்புத நடிப்பின் மூலம் ரசிகர்களை கவருகிறார் அதே போல படத்தின் மிக முக்கிய அடுத்த பலம் என்று சொன்னால் படத்தின் இசையமைப்பாளர் பின்னணி இசையின் மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதை கேர்ப இசை ஓட்டம் இது இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் நாயகன் சை அருண் தேஜ் தெலுங்கில் பிரபல நடிகர் தமிழில் இது அறிமுகம் இருந்தும் தனக்கு கொடுத்த பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கதைக்குமுக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தில் நடித்திருக்கிறார் காரணம் கதைதான் முக்கியம் என்பதால் கதைக்கும் இயக்குனரின் எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் தண்டு பல இடங்களில் நம்மை மிரட்டுகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது அந்த அளவுக்கு மிக அற்புதமான காட்சிகளை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை