Sunday, May 19
Shadow

யாத்திசை – திரைவிமர்சனம் உலக சினிமாவின் பிரமிப்பு (Rank 4./5)

யாத்திசை தமிழ் சினிமாவுக்கு ஒரு சவால் படம் என்று சொல்லலாம். பல முன்னணி இயக்குனர்கள் நடுவே ஒரு இதிகாச கதையை எடுத்து குறிப்பாக முக்கிய நட்சத்திரங்கள் இல்லாமல் முக்கிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லாமல்  ஒரு படத்தை அதுவும் பிரமாண்டமாக நேர்த்தியாக கொடுத்து இருக்கும் அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரனுக்கு பாராட்டு.

பாண்டிய மன்னன் ரணதீரன் சேர, சோழ நாட்டின் மீது படையெடுத்து அவர்களை தோற்கடித்து நாட்டை விட்டு வெளியேற்றி ஆண்டு வந்தான். இதை பார்த்த ஏயினர் கூட்ட தலைவன் கொதி பாண்டியனை தோற்கடித்து எய்னர் மக்களை சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டு பாண்டியன் மீது போர் தொடுக்கிறான் அதில் வெற்றியும் பெறுகிறான். இதனால் கோவம் அடைந்த பாண்டிய மன்னன் மீண்டும் போர் தொடுக்க முயல்கிறான் இந்த போரில் பாண்டிய மன்னன் வென்றானா இல்லை மீண்டும் தோல்வியை தழுவினரா என்பது தான் மீதிக் கதை.

முற்றிலும் புதிய முகங்களை நடிக்க வைத்து உள்ள படம் ஆனால் அனைவரும் மிக கைதேர்ந்த நடிகர் நடிகைகளாக நடித்து உள்ளனர் அனைவரும் மிக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். ஒவ்வொருவரும் படத்தின் வெற்றிக்காக உயிரை கொடுத்து நடித்து உள்ளனர் . அற்புதமான குழு இவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

அதே போல தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியும் வரைந்த ஓவியம் போல காட்சி அமைத்துள்ளார். மலை பிரதேசங்களை இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத கோணங்களில் நமக்கு விருந்து அளித்துள்ளார். அதே போல இசையமைப்பாளர் மிக சிறப்பாக பின்னணி மற்றும் பாடல்கள் கொடுத்துள்ளார். கதையின் ஓட்டம் புரிந்து பின்னணி இசையை அற்புதமாக கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் வீனஸ் கணேஷ் இவர் ஏற்கனவே விஜய் டிவியின் முன்னணி தொலைகாட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி தொடரை தயாரித்து வருபவர் முதல் படத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து அதில் வெற்றி பெற்று இருப்பது நன்று. இவருக்கும் பாராட்டுகள்.

இயக்குனர் தரணி ராஜேந்திரன் முதல் படத்திலே தன் முத்திரை பதித்து விட்டார். கடினமான உழைப்புக்கு சொந்தக்காரர் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிப்பார்.படத்தின் மிக பெரிய பலம் என்று சொன்னால் அது படத்தின் சண்டை பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் பல நூறு கோடி செலவில் செய்யப்பட வேண்டிய காட்சிகளை மிக குறைந்த பட்ஜெட்டில் உலகதரத்தில் சண்டைக்காட்சிகள் இயக்கியுள்ளார் ஓம் பிரகாஷ்.

அடுத்து படத்தில் மிக முக்கியமான பங்கு என்றால் அது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸா என்று வியக்கும் வைக்கும் அளவுக்கு அமைந்துள்ளது. மொத்தத்தில் யாத்திசை பிரமிப்பு.