அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக, ஒவ்வொரு வருடமும் புகழ் பெட்ரா தமிழர்களை, பெரும்பாலும் நடிகர்களை அமெரிக்காவிற்கு அழைக்க படுவார்கள்.இங்கு இந்திய சுதந்திரத்தினத்திற்காக, நியூயார்க்கில் இந்தியா தினம் என்று ஒரு ஊர்வலம் நடக்கும். அதில் தமிழர்கள் பிரதிநிதியாக இந்த நடிகர்களை வாகனங்கள் மேல் நிறுத்தி அழைத்து செல்வார்கள். அதன்படி இந்த வருடம் அழைத்து வரப்பட்டவர் திமிர்பிடித்த நடிகர் விக்ரம். டாக்டர். பிரகாஷ் எம் ஸ்வாமி இங்குள்ள தமிழர் சங்கத்தின் தலைவர் ஆவர். அவர் பத்திரிக்கை துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். எப்போதும் புன்னகையை முகத்தில் வைத்திருப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர். என்னை போன்ற மிக சாதாரணமான ஆட்களிடம் கூட மிக நட்புடன் இருப்பவர். அவரே கடுப்பாகி, வெறுப்புடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் என்றால், இந்த விக்ரம், எல்லைகளை தாண்டி வெகு அப்பால் சென்றிருக்க வேண்டும்.
டாக்டர் ஸ்வாமி தன் முகநூல் பதிவில்,
விக்ரம் நீங்கள் எங்களை பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள். உங்களை முதல் வகுப்பில் அழைத்து வந்தது, உங்கள் ரசிகர்களிடமும், நண்பர்களிடமும் மரியாதையை குறைவாக நீங்கள் நடந்துகொள்ள அல்ல. ரசிகர்கள் நெருங்கி வந்தால், அவர்களை விரட்டி விடுவது, திமிர்பிடித்து மண்டை கனத்துடன் நடந்து கொள்வது என்று எதையும் நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்காத வகையில் நடந்து கொண்டீர்கள் என்று போகிறது அந்த பதிவு.
கருணாநிதி வீட்டில் சம்மந்தம் செய்வதால், மண்டை கணம் ஏறிவிட்டது.
நன்றி – பிரகாஷ் M சாமி