Sunday, October 6
Shadow

ஜெயலலிதாவின் உடல்நிலையை நினைத்தால் நெஞ்சம் வடிக்கிறது டி.ராஜேந்தர் கண்ணீர்

முதல்வரின் உடல்நலம் பாதிப்பு காரணமாக தன் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என லட்சிய தி.மு.க.வின் தலைவர் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக டி.ராஜேந்தர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாளை (திங்கட்கிழமை) எனது பிறந்தநாள் வருகிறது. ஒரு காலகட்டத்தில் என் பிறந்தநாளை பல ஏழைகளுக்கு உதவும் நாளாக கொண்டாடி வந்தேன். ஆனால் சில காலமாக நான் என் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை, காரணம் பெரிதாக நான் ஏதும் சாதனைகள் நிகழ்த்தியதாக நினைக்கவில்லை. என்னை பெரிய அதிகாரத்தில், அந்தஸ்தில் இருப்பவனாக கருதவில்லை.

ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அன்று என்னை வந்து சந்திக்கும் லட்சிய தி.மு.க. தொண்டர்களையும், என் ரசிகர்களையும், அபிமானிகளையும் சந்திக்காமல் இருந்ததில்லை.

ஆனால் இந்தமுறை காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராமல் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், என் பிறந்த நாளன்று வழக்கமாக நான் சந்திக்கும் என் ரசிகர்களைக்கூட சந்திக்கும் மனநிலை எனக்கில்லை.

நான் பிறந்த தஞ்சை தரணி காவிரி நீருக்காக திண்டாடும்போது என் மனம் பிறந்தநாள் கொண்டாடுமா? ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கப்போராடி உச்சநீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால்தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர்.

Leave a Reply