Monday, October 13
Shadow

பிரியா பவானி சங்கரை ஜோடியாக்கிய விஜய் சேதுபதி!

’மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் டிவி நடிகை பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது.

கார்த்திக்கு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவரை, விஜய் சேதுபதி தனது ‘ஜுங்கா’ படத்திற்காக தட்டி தூக்கிவிட்டாராம்.

கோகுல் இயக்கும் இப்படத்தில் சாயிஷா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், மற்றொரு ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply