Sunday, May 19
Shadow

லண்டனில் கல்லா கட்டும் விஜயின் வாரிசு தமிழ் நாட்டின் நிலை என்ன?

வம்சி இயக்கத்தில் விஜய் ,ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு இதற்கான வேலைகள் மிகவும் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ரஜினி கமல் படங்களை தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்திற்கும் ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்கு விளம்பரம் யுக்தியை தயாரிப்பாளர் தில் ராஜு செய்து வருகிறார் .

அதோடு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ம் தேதி சென்னையில் நடக்க திடடமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது .

இந்தநிலையில் படத்தின் வெளிநாடு உரிமையை கடும் போட்டியிக்கு நடுவில் அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது ஒரு தகவல் வெளியாயுள்ளது.அதில் வெளிநாடு சில பகுதிகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது அதிலும் பிரிட்டனில் 100 பகுதிகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது இங்கு டிக்கெட்கள் விற்பனை மிக வேகமாக விற்று தீர்த்து விடடதாம் வெளிநாட்டு ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கும் போது விஜயின் மற்ற படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று தெரிகிறது .

இந்த சூழ்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ரெட் ஜெயன்ட் உரிமையாளர் உதயநிதியை சந்தித்து வாரிடு மற்றும் துணிவு படத்துக்கும் சம பங்கு அளவில் திரையரங்கு ஒதுக்கும் படி கேட்டாக இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.