Thursday, March 12
Shadow

8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’ படப்பிடிப்பு நிறைவு

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’ படப்பிடிப்பு நிறைவு

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ திரைப்படத்தை இயக்கிய ஹாரூன், இப்படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளனர். மேலும் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதைக் கொண்டு இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கே.வி. கிரண் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை டான் பாஸ்கோ கவனித்துள்ளார். கலை இயக்கத்தை ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றிய வேலு மேற்கொண்டுள்ளார். நடன அமைப்பை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்துள்ளார்.

போலீஸை மையமாகக் கொண்ட முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.
இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக கேப்டன் எம்.பி. ஆனந்த் மற்றும் KSK செல்வகுமார் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுத் தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘8 Thottakkal’ Fame Vetri’s ‘Buried’ Wraps Up Shooting
The upcoming film ‘Buried’ is being produced by Haroon and Mahendhar Kumar under the banners of Dream House and Jain Creations. The film is written and directed by Haroon, who previously directed ‘Web’.

Actor Vetri, who gained recognition through ‘8 Thottakkal’, plays the lead role as an encounter specialist police officer. Akshitha from Hyderabad and Shanthini Tamilarasan play the female leads. The film also features Balaji Sakthivel, Singam Puli, Saravana Subbiah, ‘Lapper Bandhu’ Jensen Divakar, and Kodangi Vadivelu in important roles.

The film is an investigative thriller that revolves around the challenges faced by an encounter specialist police officer in his professional life, the impact it creates on his family life, and how he overcomes those struggles.

Music for the film is composed by John Robbins, who has previously worked on several album songs. Cinematography is handled by K.V. Kiran, while editing is done by Don Bosco. Art direction is managed by Velu, who earlier worked as an assistant in films including Kantara. Choreography is designed by Richie Richardson.

Director Arunraja Kamaraj has sung an important song in the film that is centered around the police theme.
Captain M.P. Anand and KSK Selvakumar are serving as the executive producers of the project.

The film has been shot across locations including Chennai, Coimbatore, Yercaud, and Kodaikanal, and the shooting has now been completed. Post-production work is currently in progress.