Thursday, November 13
Shadow

உலக சினிமா கவனத்தை ஈர்த்த படம் – த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் (முகமற்றவரின் முகம்)

உலக சினிமா கவனத்தை ஈர்த்த படம் – த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் (முகமற்றவரின் முகம்)

ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் திரைப்படம், 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், இதுவரை 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

2024ஆம் ஆண்டின் சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாகத் தேர்வான இந்த படம், கிறிஸ்தவ துறவியான சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசம், இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் வளர்ச்சிக்காக அவர் செய்த தன்னலமற்ற பணிகள் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளன.

ஆன்மீகம், தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம், ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த மனிதப்பண்புகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் 136 நிமிடங்கள் ஓடக்கூடியது. படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் பெருமளவு சென்றடைய மாதா டிவியின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 21ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில், தெலுங்கு பதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகிறது.

இத்திரைப்படம் 2023ஆம் ஆண்டு கேரளாவில் வெளியானபோது ஆறு வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

தயாரிப்பாளர்: சாண்ட்ரா டி’சூசா ராணா
இயக்குனர்: ஷைசன் பி. உசுப்
நிர்வாக தயாரிப்பாளர்: ரஞ்சன் ஆபிரகாம்
ஒளிப்பதிவாளர்: மகேஷ் ஆனே
இசை: அல்போன்ஸ் ஜோசப்
கதை, வசனம்: ஜெயபால் ஆனந்தன்
நடிப்பில்: வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் உள்ளிட்ட பலர்.