
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வருகை!
மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா சாதித்த வரலாற்றுச் சிறப்பான வெற்றிக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், முதல் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
உலகின் முன்னணி 8 அணிகள் பங்கேற்ற மகளிர் உலகக் கோப்பையில் அசத்தலான ஆட்டத்துடன் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்றுத் தந்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்த வெற்றிக்குப் பின் மகளிர் சக்தியின் சின்னமாக உயர்ந்துள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், சென்னை வருகையின் போது சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரியாசீனா ஜான்சனையும், பல்கலைக்கழக தலைவர் டாக்டர் மரி ஜான்சனையும் சந்தித்து உரையாடினார்.

38 ஆண்டுகளாக கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தற்போது இந்தியாவில் மிகப்பெரிய பிக்கில் பால் (Pickle Ball) போட்டியை நடத்தி வருகிறது. மிக உயர்தர வசதிகளுடன் அமைக்கப்பட்ட 6 உள்விளையாட்டரங்குகளில், அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் இன்று மதியம் தொடங்குகின்றன.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க உள்ளார்.
