Wednesday, January 28
Shadow

மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’

மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருநங்கையாக இருந்தாலும், மனசுக்குள்ள எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கும் ஆசை, திறமை, ஏக்கம்… அதையெல்லாம் நம்ம வாழ்க்கையோட சேர்த்து பார்க்க வைக்கும் படம் தான் ‘மெல்லிசை’ என்று இயக்குநர் திரவ் சொல்லுகிறார்.

 

கிஷோர் நடித்துள்ள இந்த ‘மெல்லிசை’ படம் ஜனவரி 30 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. உணர்ச்சியும், நம்பிக்கையும், குடும்ப பாசமும் கலந்து, மனசை தொடும் கதை இதுல இருக்கும் என படக்குழு சொல்கிறது.

இந்த படத்தின் கதை ஒரு சாதாரண மனிதனைப் பற்றி. இசையை உயிராக நேசித்த ஒருவன், குடும்ப பொறுப்பு, வாழ்க்கை சுமை எல்லாம் காரணமாக தன் கனவுகளை ஓரமாக தள்ளி வைக்கிறான். ஒருகாலத்தில் நம்பிக்கையோட பாடிய அவன் குரல், காலப்போக்கில் பயம், சமரசம், நிறைவேறாத ஆசைகளுக்குள் அடங்கி போகிறது.

ஆனால் அவன் எட்டு வயது மகள் மட்டும், தோல்வியடைந்த தந்தையாக அவனை பார்க்க மறுக்கிறாள். தன் அப்பாவை உலகம் போற்றும் ஹீரோவாக மாற்ற வேண்டும் என்ற கனவோட, அவன் வாழ்க்கையைத் திருப்பி நிறுத்துகிறாள். அப்பா–மகள் பாசத்தோட தொடங்கும் இந்த பயணம், படம் முடியும் போது பார்ப்பவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கும்.

இந்த கதாபாத்திரத்தில் கிஷோர், இதுவரை நாம் பார்த்த கடினமான, வலுவான உருவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மென்மையான, அமைதியான மனிதராக தோன்றுகிறார். அவரோடு சுபத்ரா, ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி, ரவி எழுமழை உள்ளிட்ட பலர் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
இசையும் பாடல்களும் மனதை நெகிழ வைக்கும் வகையில் சங்கர் ரங்கராஜன் அமைத்திருக்கிறார்.

FDFS புரொடக்‌ஷன் தயாரிப்பில், திரவ் எழுதி இயக்கியுள்ள ‘மெல்லிசை’ – கனவுகளை கைவிடாமல் பிடித்துக் கொள்ள சொல்லும் ஒரு நம்பிக்கையின் கதை.

இந்த உணர்வுப் பயணம் ஜனவரி 30, 2026 முதல் திரையரங்குகளில்.