Tuesday, February 3
Shadow

காதல், நம்பிக்கை, நட்பு – ஒரு மேடையில் கலந்த “வித் லவ்”

காதல், நம்பிக்கை, நட்பு – ஒரு மேடையில் கலந்த “வித் லவ்”

சில திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே, அதன் சுற்றி உருவாகும் மனித உறவுகள், அந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதைக் கூறிவிடும்.

“வித் லவ் (With Love)” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா
அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகவே அமைந்தது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும்
MRP Entertainment இணைந்து வழங்கும்
இந்த காதல் திரைப்படம்,
2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
அன்று நடைபெற்ற முன் வெளியீட்டு விழா
ஒரு வழக்கமான சினிமா நிகழ்ச்சியாக இல்லாமல்,
ஒரு குடும்பம் கூடி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட
ஒரு இனிமையான மாலை போலவே இருந்தது.

இந்த படம் ஒரு குடும்ப அனுபவம்” – மேடையில் ஒலித்த ஒரே குரல்
நிகழ்வில் பேசிய ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும்
ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் ஒலித்தது –
“இந்த படம் ஒரு குடும்பம் போல உருவானது”.
உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி முதல்
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா,
எடிட்டர் சுரேஷ்,
நடிகர்கள் ஹரீஷ், சச்சின், காவ்யா,
எல்லோருமே படப்பிடிப்பு நாட்களை
ஒரு வேலைப்பாடாக அல்ல,
ஒரு இனிய பயணமாகவே நினைவுகூர்ந்தனர்.

“ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம,
சுற்றுலா போற மாதிரி இருந்தது”
என்ற நடிகர் சச்சினின் வார்த்தைகள்
அந்த சூழலை மிக அழகாக விவரித்தன.
படைப்பாளிகளின் நம்பிக்கையை உறுதி செய்த குரல்கள் திரைப்படத்தை பார்த்து விட்டதாக கூறிய தேசிங் பெரியசாமி,
ரஞ்சித் ஜெயக்கொடி, சிபி சக்கரவர்த்தி,
அருண் விஷ்வா, மணிகண்டன் உள்ளிட்ட இயக்குநர்கள், நடிகர்கள்
“வித் லவ்” திரைப்படத்தின் மீது
தங்களின் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

“சின்ன சின்ன எமோஷன்ஸை
பெரிய உணர்வாக மாற்றியிருக்கிறார்கள்”
என்ற மணிகண்டனின் கருத்து,
படத்தின் உண்மையான பலத்தை சுட்டிக்காட்டியது.

இசை, நடிப்பு – மனதை தொடும் இடங்களில்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்
இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது,
தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்தார்.
“ஒரு பெண் கதாபாத்திரத்துக்காக
நான் விசில் அடிப்பேன் என்று நினைக்கவே இல்லை”
என்று அவர் சொன்னபோது,
அனஸ்வரா ராஜனின் நடிப்பின் தாக்கம்
அந்த ஒரு வரியில் வெளிப்பட்டது.
அபிஷந்த் – அனஸ்வரா ஜோடியின் கெமிஸ்ட்ரி
திரைக்கு வெளியேயான நட்பிலிருந்தே உருவானது என்று அனஸ்வரா கூறியதும் நிகழ்வில் உணர்ச்சியை கூட்டியது.“நீ நடி கண்ணா” – ஒரு வார்த்தை, ஒரு திருப்பம்
நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் உரை
நிகழ்வின் மிக உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது.

நடிப்பை தொடரலாமா என்ற சந்தேகத்தில் இருந்த காலத்தில்
ரஜினிகாந்த் தன்னை அழைத்து
“நீ நடி கண்ணா” என்று சொன்ன அந்த ஒரு வரி தன் வாழ்க்கையை மாற்றியதாக அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.

அந்த நம்பிக்கைக்காகவே
இந்த படத்தின் வெற்றியை
சூப்பர் ஸ்டாருக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

With Love” – A Pre-Release Event Filled with Emotions, Trust, and Cinema

Some films begin to speak about themselves even before their release — through the people who come together to create them. The pre-release event of “With Love” was one such occasion, reflecting not just a movie launch, but a shared emotional journey.
Presented jointly by Soundarya Rajinikanth under Zion Films and MRP Entertainment, “With Love” is set for a worldwide theatrical release on February 6, 2026.

Rather than a conventional film function, the pre-release event unfolded like a warm family gathering, where every member of the team shared heartfelt memories, gratitude, and confidence about the film.
“This Film Was Made Like a Family”
From costume designer Priya Ravi to cinematographer Shreyas Krishna, editor Suresh, and actors Harish, Sachin, Kavya, everyone echoed the same sentiment —
“This film was made like a family.”
Actor Sachin perfectly captured the atmosphere when he said,
“It never felt like going to a shoot. Every day felt like going on a trip.”
That line alone described the soul behind With Love.

Filmmakers and Industry Voices Express Strong Confidence
Several prominent directors and actors who had already watched the film — including Desingh Periyasamy, Ranjith Jeyakodi, Sibi Chakravarthy, Arun Viswa, and Manikandan — spoke highly of the film.
Actor Manikandan summed it up beautifully:
“The strength of this film lies in how it transforms simple emotions into something deeply impactful.”

Music and Performances That Touch the Heart
Music composer Sean Roldan shared how emotionally close the film was to him.
“I never thought I would whistle for a female character — but Anaswara Rajan’s performance made that happen.”
Anaswara also spoke about how the on-screen chemistry between her and Abhishanth Jivinth came naturally from their off-screen friendship.
“Nee Nadi Kanna” — One Line That Changed a Life
One of the most emotional moments of the evening came from actor Abhishanth Jivinth.
He recalled a time when he was unsure whether to continue acting, and how Superstar Rajinikanth invited him home and told him just one line:

“Nee nadi kanna” (“You act, my boy.”)
That single sentence shattered his insecurities and changed his path. Abhishanth dedicated the film’s success entirely to Rajinikanth for that moment of faith.

Soundarya Rajinikanth – A Producer Driven by Integrity
Marking 16 years since her debut as a producer, Soundarya Rajinikanth spoke with emotion and conviction.
She emphasized that With Love is 100% director Madan’s film, praising his sincerity and vision. Many speakers highlighted her courage in backing a new team and prioritizing story over star value.

“With Love” — A Honest Modern Love Story
With Love is a fresh, contemporary romance that speaks directly to today’s youth — simple, honest, and emotionally rooted.
With Abhishanth Jivinth in the lead, directed by Madan (former associate director of Lover and Tourist Family), and music by Sean Roldan, the film promises to be a warm, relatable theatrical experience.
“With Love”
Worldwide theatrical release – February 6, 2026