
ஜெய் ஹனுமான் திரைப்படம் பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாக துவக்கம்!
பான் இந்திய அளவில் கவனம் பெற்ற ‘ஹனுமேன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் இன்று கர்நாடக மாநிலம் ஹம்பி, அஞ்சனாத்ரி மலைப்பகுதியில் பாரம்பரிய பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கும் இப்படம், அவரது சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான தயாரிக்க, நிறுவனம் வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற நடிகர் இப்படத்தில் கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாபாத்திரத்திற்கு தேவையான உடல் அமைப்பை பெற அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் துவக்க நிகழ்வில் டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை இயக்க, ‘ஹனுமேன்’ படத்தின் நாயகன் முதல் ஷாட்டை இயக்கினார். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கலியுகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த அதிரடி படத்தில் பக்தி, நம்பிக்கை மற்றும் உளவியல் எழுச்சி ஆகியவை மையமாக அமைகின்றன. “மௌனம் சரணாகதி அல்ல; அது உயர்ந்த நோக்கத்தின் அறிகுறி” என்ற கருத்தை மையமாகக் கொண்டு கதை நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தொழில்நுட்ப அணியில் ஒளிப்பதிவாளராக எஸ்.திருநாவுக்கரசு, இசையமைப்பாளராக எம்.எம்.கீரவாணி உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ‘ஜெய் ஹனுமான்’ படம், புராணக் கதையையும் சமகால அணுகுமுறையையும் இணைக்கும் வண்ணம் உருவாகிறது என்பதால் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

Jai Hanuman Movie Launched Grandly with Traditional Pooja
The sequel to the pan-India success HanuMan, titled Jai Hanuman, was formally launched today with a traditional pooja ceremony at Anjanadri Hill in Hampi, Karnataka—believed to be the birthplace of Lord Hanuman. The launch has generated significant excitement within the film industry.
Directed by National Award-winning filmmaker , the film marks the next chapter in his cinematic universe. It is being produced by leading production house and presented by .
National Award-winning actor plays the role of Lord Hanuman in the film. The recently released first-look poster featuring him received an overwhelming response from fans. The actor has reportedly undergone intense physical training to achieve a powerful and spiritually resonant screen presence for the role.
The launch ceremony was graced by T-Series head , who sounded the clapboard to mark the beginning of the shoot. switched on the camera, while HanuMan hero directed the first shot. Producers Naveen Yerneni and Y. Ravi Shankar were also present at the event.
Set against the backdrop of the Kaliyuga era, Jai Hanuman is being mounted as a high-octane action entertainer blending devotion, faith, and inner awakening. The core theme of the film revolves around the idea that “Silence is not surrender; it signifies a higher purpose and resurgence.”
With pre-production progressing at a brisk pace, regular shooting is expected to commence soon. The technical team includes cinematographer S. Thirunavukkarasu and music composer M. M. Keeravani, among others.
With its mythological roots and contemporary narrative approach, Jai Hanuman has already sparked nationwide anticipation.
