Tuesday, February 24
Shadow

பெரம்பூரின் நகைச்சுவை நிழல்களில் உருவான புதிய குடும்பத் திரைப்படம் – சம்மர் 2026-க்கு தயாராகிறது.

பெரம்பூரின் நகைச்சுவை நிழல்களில் உருவான புதிய குடும்பத் திரைப்படம் – சம்மர் 2026-க்கு தயாராகிறது

சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம், தனது முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஜாலியான பேமிலி என்டர்டெயினராக இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தை மற்றும் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தரமான கதைகளைக் கொண்டு தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் Million Dollar Studios, ‘’, ‘’, ‘’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை கவனித்ததுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களிடம் அறிமுகமானவர்.

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நடிகை முழுநீளக் கதாபாத்திரத்தில் மீண்டும் திரையுலகில் தோன்றுவது இப்படத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையை ‘’, மண்டேலா மாவீரன் ‘’ ஆகிய படங்களின் மூலம் பாராட்டு பெற்ற இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ‘’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஷெல்லி கேலிஸ்ட் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை பார்த்தா கவனித்துள்ளதுடன், கலை இயக்கத்தை மகேந்திரன் செய்துள்ளார். பாடல்களுக்கு மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.

பெரம்பூரின் இயல்பான சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், நகர்ப்புற வாழ்க்கையின் நகைச்சுவை மற்றும் உணர்ச்சித் தருணங்களை கலந்த குடும்பக் கதையாக அமையும் என கூறப்படுகிறது.

படத்தின் தலைப்பும், துல்லியமான வெளியீட்டு தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சம்மர் 2026-இல் உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

New Perambur-Based Family Entertainer Wraps Shoot; Set for Summer 2026 Release

A new Tamil film set against the backdrop of Chennai’s Perambur has successfully completed its entire shooting schedule. The makers describe the project as a light-hearted family entertainer designed to appeal to audiences of all age groups.

The film is jointly produced by and . Known for backing distinctive and content-driven projects, Million Dollar Studios has previously delivered successful films such as , , and . This marks the banner’s seventh production venture.

Pari Ilavazhagan, who gained recognition with Jama, has written the story and screenplay, directed the film, and also plays the lead role. The female lead is played by Ramya Ranganathan, who previously appeared in a key role in .

One of the major highlights of the film is the return of veteran actress in a full-length role after a long hiatus. The supporting cast includes Chethan, viral YouTuber Parithabangal Gopi, Ismath Banu, and Sudharsan Gandhi in pivotal roles.

The music is composed by Bharath Shankar, known for his work in and . Cinematography is handled by Shelley Calist, noted for his work in . Editing is by Partha, while art direction is overseen by Mahendran. Lyrics for the songs are penned by Mohan Rajan, Muthamil, and Paakiyam Shankar.

With shooting now wrapped up, the film is gearing up for a worldwide theatrical release in Summer 2026. The official title and exact release date are expected to be announced soon.